December 15, 2016

பசுமை இல்ல விளைவு (Green House Effect)

புவியின் வெப்பநிலை உயர்ந்து வருவதும் அதனால் இப்போதே [தற்போது] காணப்படும் தட்ப வெப்ப மாற்றங்களுக்கும் காரணம் பசுமை இல்ல வாயுக்களில் பிரதானமான CO2 [கரியமில வாயு]வாயு மண்டலத்தில் அதிகரிப்பதும், ஓசோன் [O3]வாயுவின் குறைவும் ஆகும்.

இந்த கார்பன் டை ஆக்ஸைடு,குளோரோ புளோரோ கார்பன் [CFC],மீத்தேன்,ஓசோன்,நைட்ரஸாக்ஸைடு ஆகியவை 'பசுமை இல்ல வாயுக்கள் எனப்படும்.

இவை வளி மண்டலத்தில் அதிக அலை நீளம் உடைய வெப்பக் கதிர்களை பகலில் சூரியனிடமிருந்து உறிஞ்சுகிறது.அவ்வாறு உறிஞ்சப்பட்ட வெப்பம் மிகக் குறைவான அளவே இரவில் வெளித்தள்ளப் பட்டு மீதம் புவிப் பரப்பிலேயே தங்கி விடுவதால் புவி வெப்பமடைய ஏதுவாகிறது.

ஒரு கண்ணாடி அறைக்குள் வளர்க்கப் படும் பச்சைத் தாவரங்கள் கரியமில வாயு மற்றும் மேற்சொன்ன வாயுக்களுடன் வினை பட்டு சோலார் கதிர்களை அதிக அளவில் உறிஞ்சுவதால் அறையின் உட்புறம் வெளிப்புறத்தைக் காட்டிலும் அதிக வெப்பமடைகிறது. புவியும் இந்த வாயுக்களால் இப்படி வெப்பமுறுவதால் ஒரு 'பசுமை இல்லமாக' கருதப் படுகிறது..இதற்கு முக்கிய காரணம் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு வளிமண்டலத்தில் நாளுக்கு நாள் அதிகரிப்பதே.

ஒரு வருடத்தில் சுமார்18x10^12 டன் அளவு இந்த CO2 வாயு உற்பத்தியாகி வாயு வெளியில் கலக்கிறது.பெருகிவிட்ட சனத்தொகை, வாகனங்களின் அதிகப் படியான பயன்பாட்டால் வெளிப்படும் புகை தொழிற்சாலைகளின் பெருக்கம் எல்லாம் இதற்கு காரணமாக அமைகிறது.

வளி மண்டல ஓசோன் ஒரு குடை போல செயல்பட்டு சூரியக் கதிர்களில் உள்ள தீமை செய்யும் அல்ட்ரா வயலட்[புற ஊதா]கதிர்களை அகச் சிவப்பு கதிர்களாக மாற்றி நம்மைக் காக்கிறது.

மேற்சொன்ன அதே காரணங்களால் ஓசோன் படலமும் பாதிக்கப் பட்டு வருகிறது.இதைத்தான் ஓசோன் குடையில் ஓட்டை என்கிறோம்.ஒரு பொத்தல் குடை எப்படி வெயில்,மழையிலிருந்து நம்மை சரிவர பாது காக்க முடியாதோ அதுபோல ஓசோன் படலத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் குறைவு சூரியக் கதிர்களை தடுக்கும் ஆற்றலை இழந்து புவி வெப்பம் அதிகரிக்கக் காரணமாகிறது.


அத்தோடு மட்டுமில்லாமல், நாளடைவில் தோல் வியாதிகள் கேன்சர் போன்றவையும் கண் குறைபாடுகளும் ஏற்படக் கூடிய வாய்ப்பும் உள்ளது.

இந்த குளோபல் வார்மிங்.[global warming],ஓசோன் ஓட்டை.[ozone depletion],,பசுமை இல்ல விளைவு [Greenhouse effect] மூன்றுக்கும்
அதிகப் படியான வாகன,தொழிற்சாலை,அணுமின் நிலையம்,மின் உற்பத்தி இவைகளால் ஏற்படும் புகையே காரணம்.

தகுந்த மாசுக்கட்டுப்பாடு நடைமுறைகளும்,தனிமனித ஒத்துழைப்புமே எதிர்வரும் பயங்கரமான ஆபத்திலிருந்து நம்மை நாமே காத்துக் கொள்ள வழி வகுக்கும்.

0 comments:

Post a Comment