December 27, 2016

எதிர்த்திசை சவ்வூடுபுகவிடுதல் முறை (Reverse Osmosis) வடிகட்டுதலின் சாதக பாதக நிலைமகள்


சாதாரணமாக நீரில் பலவிதமான நுண்ணங்கிகள் மற்றும் இரசாயனப்பதார்த்தங்கள் காணப்படக்கூடும். இந்நீரை நாம் பருகும்போது அவை எமது உடலினுள் சென்று பல தீங்குகளை ஏற்படுத்தக்கூடும். ஆகையால் நாம் பருகுவதற்கு எடுக்கும் நீரை நன்கு தூய்மையாக்கி பருக வேண்டியது அவசியமாகின்றது.
அந்தவகையில், நீர் சுத்திகரிப்பு முறைகள் பல இருந்தாலும், எதிர்த்திசை சவ்வூடு மென்புகவிடுதல் முறையினதும் அதன் மூலம் சுத்திகரிக்கப்படும் நீரை பருகுவதன் மூலம் ஏற்படும் நன்மை தீமைகளைப் பற்றி இங்கு பார்ப்போம்.

நன்மைகள்
  • இந்த சுத்திகரிக்கப்படும் முறை மூலம் சாதாரண நீரிலுள்ள 98 சதவீதமான இரசாயனப்பொருட்களும் கழிவுப்பொருட்களும் அகற்றப்படுகின்றன. ஆகையால் மிகவும் தூய்மையான நீர் எமக்குக் கிடைக்கின்றது. அத்துடன் குடிப்பதற்கு ஏற்ற வகையில் சுவையையும் வழங்குகின்றது.
  • ஈயம், இரசம், குளோரின், அஸ்பெரஸ் போன்ற 2100 வகையான நச்சுப்பதார்த்தங்களை எதிர்த்திசை சவ்வூடு புகவிடுதல் வடிகட்டும் முறை நீக்குவதனால் அவற்றினால் ஏற்படும் நோய்த்தாக்கங்கள் இல்லாது செய்யப்படுகின்றது.
  • இந்த முறையில் சுத்திகரிக்கப்பட்ட நீரைப் பருகும்போது, எமது உடலுக்கு உடனடியாக நீரேற்றத்தை வழங்குகின்றது.
  • நீரின் கடினத்தன்மை அதிகமாகவுள்ள பிரதேசங்களுக்கு மிகவும் சிறந்த ஒரு சுத்திகரிப்பு முறையாகும்.
  •  இந்த சுத்திகரிப்பு முறையில் நீரில் உள்ள கழிவுகள் பிரித்தெடுக்கப்பட்டு அடைய விடப்படுவதில்லை ஆனால் அவை கழிவு நீருடன் வெளியேற்றப்படுகின்றன. இதனால் இது மிகவும் இலகுவான ஒரு சுத்திகரிப்பு முறையாகும்.
  •  நீர் சுத்திகரிப்புத் தொகுதியை அன்றாடம் பராமரிக்கவேண்டிய தேவை இல்லை. ஆயினும் குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்திகரிப்பிற்கு எதுவித தடங்கலுமின்றி பராமரிப்பினை மேற்கொள்ள முடியும்.
  •  மிகக்குறைந்த சக்தி முதலைப்பயன்படுத்தி நீர் சுத்திகரிப்பை மேற்கொள்ளலாம்.
  •  மிகச்சிறிய இடத்தில் சுத்திகரிப்புத்தொகுதியை பொருத்த முடியும்.
  •  சுத்திகரிப்புத்தொகுகள் முழுமையாக தன்னியக்கமானவை. இதனால் இதனை இயக்குவதற்கு கூலியாட்கள் யாரும் தேவையில்லை.
  •  சுத்திகரிப்பின்போது எந்தவிதமான தீங்குவிளைவிக்கக்கூடிய பதார்த்தங்களையும் உருவாக்குவதில்லை. ஆகையால் சுற்றுச்சூழலுக்கு நட்புறவான ஒரு சுத்திகரிப்பு முறையாக இருக்கின்றது.


குறைபாடுகள்
  • வீட்டு உபயோக எதிர்த்திசை சவ்வூடுபரவல் அலகுகள் அதன் குறைந்த பின் அழுத்தத்தால் அதிகமான நீரை பயன்படுத்துகிறது. இதன் முடிவாக அமைப்பில் நீர் நுழையும் போது 5 இல் இருந்து 15 சதவீதம் மட்டுமே அவை திரும்பப் பெறப்படு கின்றது. எஞ்சியவை கழிவு நீராக வெளியேற்றப்படுகிறது. ஏனெனில் கழிவு நீரானது நீக்கப்பட்ட மாசுக்களைத் தன்னுள் கொண்டுள்ளதுஇ வீட்டு உபயோக அமைப்புகளில் இந்த நீரை திரும்பப் பெறும் வகைகள் நடைமுறைக்கு ஒத்துவராது. கழிவு நீர் பொதுவாக வீட்டு வடிகால்களில் கொண்டு சேர்க்கப்படும் மேலும் இது வீட்டு உபயோக செப்டிக் அமைப்பிலும் இதன் பளுவை அதிகரிக்கிறது. (ஒரு RO அலகு ஒரு நாளைக்கு 5 கேலன்கள் சுத்தப்படுத்தப்பட்ட நீரை வழங்குகிறதுஇ மேலும் ஒரு நாளைக்கு 40 இல் இருந்து 90 கேலன்கள் கழிவு நீரை செப்டிக் அமைப்பினுள் கொண்டு சேர்க்கிறது.)
  • நீரிலுள்ள பெரும்பாலான கனியச்சத்துக்களும் நார்ச்சத்துகக்ளும் வடிகட்டப்படுவதனால் அந்த நீரைப் (Hungry Water) பருகும்போது அது உடலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
  •  நீரை விட குறைந்த பருமன்கொண்ட மூலக்கூறுகளை இந்த வடிகட்டுதல் முறைமூலம் அகற்றுவது கடினம்.
  •  மின்சாரத்தில் மட்டுமே இயங்கக்கூடியதாக இருப்பதனால் மின்சாரம் இன்றி இதனைச் செயற்படுத்த முடியாது என்பதுடன் செலவு கூடியதொன்றாகவும் காணப்படுகின்றது.
  •  தொகுதியைச்சுத்தம் செய்வதற்கு தொழில்முறை வல்லுனர் ஒருவர் தேவை.

0 comments:

Post a Comment