December 29, 2016

உயர் குருதி அமுக்கத்தை கட்டுப்படுத்தல்

எமது இதயம் ஒவ்வொரு முறையும் துடிக்கும் போது குருதியை உடல் பூராகவும் குருதிக் குழாய்கள் மூலம் பம்புகிறது அவ்வாறு பம்பப்படும் குருதியின் ஓட்டத்தினால் குருதிக்குழாய்களின் சுவரில் ஏற்படும் தாக்கம் குருதியமுக்கம் ஆகும். சாதாரண ஆரோக்கியமான மனிதன் குருதியமுக்கம் 128/80 ஆகக் காணப்படும். குருதியமுக்கமானது 140/90 ஐ விட ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் அதிகரிக்கும் போதே அது உயர் குருதியமுக்கம் எனப்படும்.


பின்வரும் காரணிகளால் உயர் குருதியமுக்கம் ஏற்படும்.
·         பரம்பரையில் உயர் குருதியமுக்கம் காணப்படல்
·         அதிக மனஅழுத்தம்.
·         அதிக உடல் பருமன்.
·         அதிக மதுப்பாவனை.
·         புகைப்பிடித்தல்.
·         முதுமை.
·         குருதியில் அதிக கொலஸ்ரோல் காணப்படல்.
·         உப்பு அதிகமான உணவுகளை உண்ணுதல்.
·         சிறுநீரக நோய்கள்.
·         போதைப்பொருள் பாவனை
·         சில ஹோமோன்களின் சமனிலை பாதிப்பு.
·         பிறப்பு நிறை குறைவு.

உயர் குருதியமுக்கத்தினால் ஏற்படும் பதிப்புக்கள்.
·         மாரடைப்பு இதயபலவீனம்
·         பக்கவாதம்.
·         சிறுநீரக செயலிழப்பு.
·         பார்வையிழப்பு.
·         குருதிக்குழாய் வெடிப்பு.

உயர் குருதியமுக்கத்தில் இருந்து எம்மை எவ்வாறு பாதுகாத்து கொள்வது?.
1.    ஆரோக்கிய உணவு முறை.
    உப்பை மிகக் குறைவாக உணவில் சேர்த்து கொள்ளல்
    அதிக கொழுப்பு அடங்கிய எண்ணெய், மாஜரின், பட்டர், பொரியல்,முட்டை மஞ்சட்கரு, இறைச்சி போன்ற உணவுகளை தவிர்த்து கொள்ளல்.
    உணவில் அதிகம் மரக்கறி, காய்கறி, பழவகைகளை சேர்த்து கொள்ளல்


2.    உடற்பயிற்சி
    நாளொன்றிக்கு 30 நிமிடம் என வாரத்தில் 5 நாட்களுக்கு மேல் உடற்பயிற்சி மேற்கொள்ளல்.
    இளமை முதலே உடற்பயிற்சி செய்வது முதுமையில் ஏற்படும் உயர்குருதி அமுக்கம், நீரழிவு, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களை தடுக்கின்றது.
3.    புகைப்pடித்தலை முற்றாக நிறுத்துதல்.
4.    மதுபானத்தை தவிர்தது கொள்ளல்.
5.    உடல் எடையை உயரத்திற்கு ஏற்ப சாதாரண அளவில் பேணிக்கொள்ளல்.
6.    தியானம், யோகா, மூச்சுப்பயிற்சி கோன்றவற்றில் ஈடுபடுவதன் மூலம் மனஅழுத்தம் குறைகிறது.
7.    ஒவ்வொருவரும் நாற்பது வயதின் பின் 3 மாதங்களுக்கு ஒருமறையாவது குருதியமுக்கத்தை பரிசோதித்தல்.

0 comments:

Post a Comment