December 19, 2016

மின்சாரத்தின் தேவை:

வீட்டு உபயோகத்திற்காக தண்ணீர் தொட்டிக்கு தண்ணீரை ஏற்றுவதிலிருந்து, சமையல், பொழுதுபோக்கு என்று நம் வாழ்வின் அனைத்து படிகளும் இன்று மின்சாரத்தின் அடிப்படையில்தான் நடக்கின்றன.

நாளுக்கு நாள் மின்சாரத்தின் தேவை அதிகரித்துக்கொண்டே வரும் சூழ்நிலையில் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பில்லாத மரபு சாரா எரிசக்தி மீது உலகத்தின் கவனம் திரும்பியுள்ளது. அனல் மின்சாரத்தை விட அதிகம் செலவானாலும், உற்பத்தி அதிகரிக்கும் போது விலை குறையும். 

மின்சாரத்தைப் பற்றின புரிதலில் சில விவரங்களை நாம் அறிவது அவசியம்.


(1) எண்ணெய், எரிவாயு, நிலக்கரி, அணு சக்தி போன்றவற்றின் மூலமாகவே உலகின் பெரும்பான்மையான மின்சாரத்தேவை பூர்த்தி செய்யப் படுகிறது.

(2) நீர்மின்சக்தி உலகின் எல்லா பிராந்தியங்களிலும், எல்லா பருவங்களிலும் கிடைப்பதில்லை.

(3) காற்றாலைகள் மூலம் மின்சாரம் எடுப்பதிலும் பருவகால சிக்கல்கள் உள்ளன. மேலும் முதலீடுகளும் மிக அதிகம்.

4) சூரிய ஒளியின் மூலம் கிடைக்கும் மின்சாரத்தின் அளவு மிகவும் குறைவு. கால்குலேட்டர்கள் போன்ற சிறிய உபகரணங்கள் இந்த சக்தியைக் கொண்டு உருவாக்கப்பட்டன. தற்காலத்தில் வீடுகளில் குளிக்கத் தேவைப்படும் வெந்நீருக்காக சூரிய சக்தி பயன்பட்டாலும், பெரிய அலுவலகங்கள், பெரிய தொழிற்சாலைகளில் தேவைப்படும் பெரிய உபகரணங்கள் போன்றவற்றை சூரியசக்தியின் மூலம் இயக்க முடியவில்லை.

(5) Alternative Energy என்று கூறப்படும் இம்முறைகளால் மக்களின் மின்சாரத்தேவை முழுவதையும் பூர்த்தி செய்ய இயலவில்லை. வரும் காலங்களில் அறிவியல் மேலும் முன்னேறி இந்த நிலை மாறலாம். ஆனால் தற்பொழுதைய நிலவரப்படி நிலக்கரி போன்றவற்றை முற்றும் முழுவதுமாக நம்மால் ஒதுக்க முடியாது.

(6)வளரும் நாடுகளில் நம்மால் மிகப்பெரிய அளவில் முதலீடுகளை செய்து நம் மின் தேவையின் ஒரு சிறிய பங்கை பூர்த்தி செய்து கொள்வது நடைமுறை சாத்தியமல்ல.

(7) மனிதருக்கோ, நம் புவி கிரகத்திற்கோ ஒரு துளியும் சேதம் விளைவிக்காத மின் உற்பத்தி முறைகள் தற்பொழுதைய சூழலில் உருவாகவில்லை.

குறைந்த அளவிலாவது இயற்கையை துவம்சம் செய்தால் மட்டுமே மனிதர்கள் வாழ முடியும் என்ற நிலைதான் இன்று உள்ளது. இந்த நடைமுறை யதார்த்தத்தை ஒப்புக்கொண்டு மேலே பயணிக்கலாம்.மனிதர்களுக்கு துளியும் சேதம் விளைவிக்காத மின் உற்பத்தி முறைகள் இன்றைய நிலையில் நம் வசம் இல்லை

0 comments:

Post a Comment