December 3, 2017

இயலாமையை வென்ற மாமனிதர் - ஸ்டீபன் ஹவ்கிங்


ஸ்டீபன் ஹவ்கிங் ஜனவரி மாதம் 1942 ஆம் ஆண்டு பிறந்தார். இது கலிலியோ கலிலியின் 300 வது இறந்த ஆண்டு என்பதும் குறிப்பிடதக்க ஒரு விடயமாகும். நன்கு கல்வியறிவு பெற்ற குடும்பத்தில் பிறந்திருந்தாலும் இவர் பிறக்கும் தருணத்தில் இவரது பெற்றோர் மிகுந்த பணக் கஷ்டத்தில் இருந்தனர். மேலும் இரண்டாம் உலகப் போரில் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பான இடம் தேடி, சவாலானதொரு வாழ்க்கையை  வாழ்ந்து வந்தனர்.


அவரது ஆரம்ப பள்ளி வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை. இதனால் இவர் தனது வகுப்பில் கீழிருந்து மூன்றாவது மாணவராக காணப்பட்டார். இவருக்கு board விளையாட்டுக்களில் அதிக ஆர்வம் இருந்தது. இவர்  தானும் தனது நண்பர்களையும் சேர்த்துக் கொண்டு கணித சமன்பாடுகளை தீர்க்க கழிவு பகுதியிலிருந்து கணினிகளை உருவாக்கினார். இதுமட்டுமின்றி ஏறுதல், நடனம் மற்றும் படகோட்டுதல் போன்ற துறைகளிலும் அதீத ஆர்வம் இவருக்கு இருந்தது. இவர் கணிதத்தை பெரிதும் விரும்பினார் இருந்தாலும் பின்னர் இவரது ஆர்வம் அண்டவியல் தொடர்பாக மாறியது.

இவரது 21 வயதில் Amyotrophic lateral sclerosis  என்ற தசையூட்டமற்ற பக்க மரப்பு நோயினால் பாதிக்கப்பட்டார் மேலும் இவ் குணப்படுத்த முடியாத நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கை, கால் முதலிய உடலியக்கங்களும் பாதிக்கப்பட்டு, பேச்சையும் இழந்த நிலையில் கணினியூடாகப் பேச்சுத் தொகுப்பி மூலம் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் கட்டாயத்துக்குள்ளானார்.
"நான் 21 வயதில் இருந்தபோது என் எதிர்பார்ப்பு பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டது” என தனது நேர்க்காணல் ஒன்றில் அவர் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் இன்று தனது இயலாமையை தகர்த்து எறிந்து மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக உலகின் தலைசிறந்த ஒரு விஞ்ஞானியாக இன்று மாறியுள்ளார்.



இவரது பயணம்

இவரது பயணம் கருந்துளை தொடர்பான ஆராய்சியிலிருந்து தொடங்கியது. இது தொடர்பாக The Grand Design என்ற முதல் பெரிய வெளியீட்டையும் அவர் வெளியிட்டிருந்தார். இந்த வெளியீட்டில் அண்டத்தின் தோற்றத்தை விளக்க இறை கருத்துரு தேவை இல்லை என்று வாதித்தார். இயற்பியல் விதிகளால் மட்டும் பெரும் வெடிப்பையும், அண்டத்தையும் விளக்க முடியும் என்று இந்த நூலின் மூலம் தெரிவித்தார். இந்த நூலின் விமர்சனங்களுக்குப் பதில் தருகையில், ஸ்டீபன் ஹவ்கிங், "இறைவன் இல்லை என்று நிரூபிக்க முடியாது, ஆனால் அறிவியல் இறைவனை  தேவையற்றதாக ஆக்குகிறது" என்று கூறினார்.

இவரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் நிறைய உள்ளன. அவர் தனது நோயிலிருந்து மீளவில்லை, இது காலப்போக்கில்  அவரை உடல் ரீதியாக மிகவும் பலவீனப்படுத்தியது. உடல்  செயலிழந்த நிலையில் தனது மனதினால் தனது வேலைகளை செய்து வருகின்றார். இவர் “என்னால் நகர முடியாது ஆனால் கணினியின் உதவியுடன் பேசுகின்றேன். என் மனதில் நான் சுதந்திரமாக இருக்கிறேன்” என கூறியுள்ளார்.


இவரது உடம்பு செயலிழந்தாலும் இவரது மனமானது செயலிழக்கவில்லை. வயது 75 இனை கடந்தாலும் இன்றுவரை சவால்களை ஏற்றுக்கொண்டு வாழ தயாராக இருக்கும் தைரியத்தை கண்டு அனைவரும் இவரை ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். இறப்பு ஒரு நாள் கட்டாயம் அனைவருக்கும் நிகழும் ஆனால் அப் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் எதை இச் சமுதாயத்திற்கு நாம் விட்டு செல்கின்றோம் என்பதே முக்கியமானதொன்றாகும்.
“எனக்கு மரணத்திற்கு பயம் இல்லை ஆனால் இறப்தற்கு எந்த அவசரமும் இல்லை.” என்பது இவரது கருத்துகளில் ஒன்று.


நகரவோ கதைக்கவோ முடியாது முற்றிலும் செயலிழந்த ஒரு மனிதர் உலகிற்கு அரிய பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி தனது குடும்பத்துடன் சாதாரண வாழ்கையை வாழ முடியும் எனின், ஏன் எம்மில் சிலர் நம்பிக்கையை இழந்து வாழ்கையில் தோல்வி அடைகின்றனர். நாம் வாழும் வாழ்கை மற்றவர்கள் ஒரு வீதமெனினும் நன்மை பெறக்கூடியதாக இருக்க வேண்டும்.

“விண்மீன்களைப் பார்க்கவும், அது உங்கள் காலடியில் இல்லை என்பதை நினைவில் கொள்ளவும் வேலையை விட்டுவிடாதீர்கள் இங்கு வேலை என்பது உங்களுக்கு அர்த்ததையும் நோக்கத்தையும் தருகின்றது. இவைகள் இல்லாத வாழ்கை வெறுமையானதொன்றாகும்.’’ ஸ்டீபன் ஹவ்கிங்

Source - http://yourdost.com/blog/

0 comments:

Post a Comment