December 18, 2017

வண்ணத்துப்பூச்சியின் வானவில் ரகசியம்

விதவிதமான வண்ணத்துப் பூச்சிகளின் சிறகுகள் மிளிர்வதை நாம் கண்டு  வியந்திருக் கின்றோம். அதனை துரத்தி பிடித்திருக்கின்றோம். ஆனால், அதன் சிறகுகளின் நிறம் பற்றிய ரகசியம் அறிய சிந்தனையை செலுத் தியதில்லை. அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் வினோத் குமார், சாரநாதன் தலைமையில் மேற் கொண்ட ஆராய்ச்சியில் அத்தகைய மிளிர்வுக்கு காரணம் நிறமிகள் அல்ல, செல்களின் அமைப்புதான் என்று கண்டறிந்துள்ளனர்.
இதற்காக, விஞ்ஞானிகள் ஐந்து வகை யான வண்ணத்துப் பூச்சிகளை எடுத்து அதன் சிறகுகளின் முப்பரிமாண உள்ள மைப்பு ஏடுகளை அறிய ஷ் – கதிர் ஒளிச் சிதறலுக்கு உட்படுத்தி ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில்  வண்ணத்துப் பூச்சியின் இறகுகள் கைராய்டு எனப்படும் மிகச்சிறிய கட்டமைப்பி லானது எனவும், இந்த கைராய்டுகள் கிரிஸ் டல்கள் (படிகம்) போல செயல்பட்டு சூரிய ஒளியை விளிம்பு விளைவுக்கு உட்படுத்து கிறது எனவும் கண்டறிந்துள்ளனர்.
இதுவரை வண்ணத்துப் பூச்சியின் இறகுகளை இரு பரிமாண எலெக்ட்ரான் நுண்ணோக்கிகளை கொண்டு மட்டுமே ஆய்வு செய்யப்பட்டுள்ளதால், அந்த ஆய்வில் ஒரு உறுதியான முன்னேற்றமின்றி இருந்தது. ஆனால் தற்போது புதிய தொழில்நுட்பத்தில் சிறப்பாக காணமுடிகிறது. அதுசரி இந்த கைராய்டுக்கு வருவோம். இந்த கைராய்டு  என்பது மின்விசிறியின் இலை போன்றது. தானாக பொருந்தக்கூடிய, நான்கு அடுக்கு களில் ஒன்று. இது நன்கு உறுதியான சிடின் என்னும் ஸ்டார்ச்சினால் ஆனதாகும். இந்த கைராய்டு அமைப்பு பூச்சியின் மேற்பரப்பில் அமைந்துள்ளது.
மேலும் வண்ணத்துப் பூச்சியின் சிறகில் அமைந்துள்ள செல் ஏடு சவ்வானது வளர்ந்து செல்களின் உள்ளே மடித்து வைக்கப் படுகிறது. இந்த மடித்து வைக்கப்படும் சவ்வானது இரு கைராய்டுகளாக உருவாகிறது. வெளி மற்றும் உட்புற செல்களின் சவ்வு களானது இந்த இரு கைராய்டுகளையும் கண்ணாடி அமைப்புடைய வலைதளமாக மாற்றுகிறது. சிடின் வெளிப்புற கைராய்டில் சேமிக்கப்படுகிறது. இதனால் அது ஒரு திடப் படிகமாக மாறுகிறது.
பின்னர் அந்த செல் இறந்துபோவதால் ஒரு மிக நுண்ணிய அமைப்பினைக் கொண்ட ஒளி ஊடுருவும் தன்மையுடன் படிகம் உருவாகிறது. இந்த படிகம் போன்ற அமைப்பு ஒன்றை மற்றும் எதிரொளித்துவிட்டு ஒளியின் மற்ற எல்லா அலைநீளங்களையும் அதனுள் கடத்திவிடுகிறது.
கைராய்டின் அளவு நிறத்தை தீர்மானிக் கிறது. அதன் அமைப்பு சுருங்கும்போது நிறம் மங்கலாகவும் விரிவடையும் போது சிவப்பாகவும் மாறுகிறது. மேலும் பல நீண்ட காலம் நீடித்து நிலைக்கக் கூடியதும், மங்க லாகாததுமாகும் இதன் நிறம்.  இவ்வாறுதான் பட்டாம்பூச்சிகள்  நிறத்தைப் பெற்றுள்ளன. இந்தப் பண்பினால், ஒற்றை கைராய்டுகள் நுட்பத்தை கண்ணாடிகளிலும் சூரிய ஆற்றல் சேமிக்கும் தொழில்நுட்பத்திலும் பயன் படுத்தலாம். இதே நுட்பத்தை சிறந்த கண்ணாடி பொருள்கள் தயாரிப்பிலும், மிகச்சிறந்த சோலார் செல்கள் உருவாக்குவதிலும் பயன் படுத்தமுடியும்.

0 comments:

Post a Comment