March 19, 2015

மது பாவனை எவ்வாறு பாதுகாப்பான ஓட்டும் திறமையை பாதிக்கிறது



நிதானித்தல் : நிதானமானதும் பொறுப்பானதுமான திர்மானங்களை எடுக்கும் ஆற்றல் :

மதுபானம் அருந்துதல் உங்களின் மனநிலையை பதிக்கும் அதேவேளை நிதானத்தையும் தொலைப்பபீர்கள். இதனால் நியாயபடுத்ல் எச்சரிக்கையாக இருத்தல் விரைவில் குறைவடைகிறது. இது 2% BAC வரை குறைவடையலாம்.

கவனம் செலுத்துதல் : ஒரு செயற்பாட்டில் இருந்து இன்னொன்றுக்கு கவனம் செலுத்தும் ஆற்றல்.


மதுபானம் வாகனத்தின் வேகம், வாகனத்தின் நிலை, விதியில் செல்லும் ஏனைய வாகனங்கள், வானொலியை திருப்புதல், வேறு பிரயாணிகளுடன் கதைத்தல் ஆகிய பல தொழில்களில் கவனம் செலுத்தும் ஆற்றலை பாதிக்கிறது. ஏனெனில் சாரதி ஒரு செயற்பாட்டில் தான் கவனம் செலுத்தலாம்.



புரிந்து கொள்ளுதல் நிலைமைகள் குறியீடுகள் மற்றும் / அல்லது சமிஞ்சைகளை விளங்கும் ஆற்றல்




ஒரு சாரதி நிலைமைகள் குறியீடுகள் மற்றும் / அல்லது சமிஞ்சைகளை புரிந்து கொள்ளும் ஆற்றல்  பாதிப்படைவதால் சாரதி வீதியில் பாதுகாப்பாக செல்லவேண்டும் என்பதை  துரிதமாக விளங்க முடிவதில்லை. சுலபமான சமிஞ்சைகளை விளங்கி கொள்ளவோ அல்லது நிலைமைகளை எதிர்கொள்ள முடியாமல் சாரதி தடுமாறுவது.

ஒருகிணைப்பு: வாகனம் ஓட்டும் திறமைகளை ஒருங்கினைகும் ஆற்றல்:



இலகுவான வாகன திறமைகளுடன் ஆரம்பித்து பெரும் வாகன திறைமை வரையனவற்றை பாதிக்கும்.
ஒருங்கிணைப்பு தன்மை இழக்படுவதால் செயற்பாட்டு நேரத்தையும் செயற்பாட்டை எதிர்கொள்வதையும் அதிகம் பாதிக்கிறது.

கண் பார்வையும் செவிப்புலன் கூர்மையும் : தெளிவாக பார்பதற்கும் கேட்பதற்குமான ஆற்றல்

1. கண் பார்வை கூர்மை 32% வரை குறைவடையும்.
2. சுற்றளவு பார்வை குறைவடைவதால் ஒடுங்கிய பார்வை
3. கண்மணி விரிந்து கண்மணியின் செயற்பாடு குறைவடைவதால் எதிரே வரும் முகப்பு விளக்கினால் பிரச்சனைகள் உருவாகி கண் இருட்டிய படி ஓட நேரிடும்.
4. செவிப்புலன் கேட்கும் ஆற்றலை குறைத்து ஒலி அடங்கி ஒலி வரும் திசையை அறியும் ஆற்றல் குறைவடையும்.

செயற்பாட்டு நிலை : நிலவரத்தை விளங்கி அதற்கு ஏற்றபோல் செயற்படுவது.



குறிப்பாக விளக்கம் மற்றும் ஒருகிணைப்பு பாதிபடைவத்தால் செயப்பாட்டு நேரம் வெகுவாக குறைவடையும்.
செயற்பாட்டு திறன் 15 – 2௦ % குறைவடயும்.

இவ்வாறன அனைத்து சந்தர்பங்களும் மதுபானம் அருந்தாமல் இருக்கும் சந்தர்பத்தில் 
தவிர்த்து கொள்ளலாம்.



0 comments:

Post a Comment