எமது உடலின் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக உடலின் வழமையான அனுசேபத் தொழிற்பாடுகளைச் சீராக மேற்கொள்வதற்காக மிகக் குறைந்தளவில் தேவைப்படுகின்ற சிக்கலான சேதனப் பதார்த்தங்களே ஒருவருக்கு தேவைப்படினும் இவற்றின் பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது. உடலின் உறுப்புக்களின் கட்டமைப்புக்கும் தொழிற்பாட்டுக்கும் விற்றமின்கள் அவசியமானவை. அதிலும் விற்றமின் B ஆனது மென்மேலும் முக்கிய பங்களிக்கிறது. நொதியங்கள் இரத்த உற்பத்தி, மூளை, நரம்பு என்பவற்றின் விருத்தி என அதிகளவு செயற்பாடுகளுக்கு விற்றமின் B முக்கியமானது.
விற்றமின் B ஆனது பல இரசாயனப்பொருட்கள் அடங்கிய ஒரு கூட்டு விற்றமின் இதனால் B Complex என்று அழைக்கப்படுகிறது. B1, B2, B3, B5, B6, B12, Follic acid, Biotin அடங்கலாககப் பல கூறுகளைக் கொண்ட இவ் உயிர்ச்சத்தின் ஒவ்வொரு கூறும் முக்கியமான உயிரியல் இரசாயன தாக்கங்களில் ஈடுபடுகின்றன.
B1 - இது தவிடுள்ள தானியங்களில் அதிகளவில் காணப்படும். இது மூளை முண்ணான் உற்பத்தியிலும் வளர்ச்சியிலும் செயற்பாட்டிலும் முக்கிய பங்குவகிக்கிறது. இதன் குறைபாட்டினால் பெரிபெரி நோய் ஏற்படும். மேலும் எடிமா நோய் ஏற்படும்.
B2 - இது தோல், கண் என்பன ஆரோக்கிய நிலையில் பேணப்பட உதவும். மூளை வளர்ச்சிக்கும் இது அவசியமானது. இதன் குறைபாட்டினால் கடைவாய்ப்பகுதி வெடித்துப் புண் ஏற்படும். கண்பார்வை மங்குதல் போன்றன ஏற்படும்.
B3-. இதன் குறைபாட்டினால் "Pellagara" நோய் ஏற்படும்.
B5 - இது எமது உடலில் அமினோஅமிலம் துணை நொதியம் A யின் தொகுப்புக்கு அவசியமானது. இதன் குறைபாட்டினால் தசைகள் விரைவில் களைப்படைந்து தசைப்பிடிப்பு ஏற்படும்.
B6 - இது உடலில் நிகழும் புரத அனுசேபத்துக்கு அவசியமானது. இதன் குறைபாட்டினால் தோலில் வெடிப்பு ஏற்படுவதுடன் குருதிச்சோகையும் ஏற்படும்.
B12 - DNA, RNA தொகுப்புக்கு அவசியமானது எனவே ஒவ்வொரு கலங்களினதும் கருவின் உற்பத்தியில் பங்களிக்கின்றது. மேலும் செங்குழியங்களின் உற்பத்திக்கும் முதிர்ச்சிக்கும் அவசியமானது. இதன் குறைபாட்டினால் குருதிச்சோகை ஏற்படும்.
B12 - DNA, RNA தொகுப்புக்கு அவசியமானது எனவே ஒவ்வொரு கலங்களினதும் கருவின் உற்பத்தியில் பங்களிக்கின்றது. மேலும் செங்குழியங்களின் உற்பத்திக்கும் முதிர்ச்சிக்கும் அவசியமானது. இதன் குறைபாட்டினால் குருதிச்சோகை ஏற்படும்.
Follic acid - இது பிரதானமாக முதிர்வு மூலவுருவின் முண்ணான் விருத்திக்கு அவசியமானது. மேலும் செங்குழியத்தின் உற்பத்திக்கு அவசியமானது. இதன் குறைபாட்டினால் குருதிச்சோகை ஏற்படும். முதிர்வு மூலவுருவின் முண்ணான் விருத்தி பாதிக்கப்படும்.
Biotin- இது காபோவைதரேற் புரதங்கள் இலிப்பிட்டுக்களின் அனுசேபத்துக்கு உதவும். இதன் காரணமாகக கண் பாதிக்கப்படும்.
விற்றமின் பொதுவாகப் பல உணவுகளில் காணப்படும். குறிப்பாக கோது நீக்கிய தானயங்கள், தவிடு நீக்காத சிவப்பரிசி ஆகியவற்றில் அதிகளவில் காணப்படும். மேலும் இது விலங்கு உணவுகளான பால், மீன், இறைச்சி, முட்டை என்பவற்றிலும் கூடியளவு காணப்படும்.
விற்றமின் ஆனது பிரதானமாக மூளை முண்ணான் வளர்ச்சியிலும் செயற்பாட்டிலும் முக்கிய பங்களிப்பு செய்வதால் இளமையில் இவ் விற்றமின் போதியளவு காணப்படாதிருப்பினும் முதுமையில் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுததும். இளமையில் குறைவடையின் முதுமைக்காலங்களில் மூளைக்கலங்கள் சுருக்கமடைந்து சிதைவடையும். இதனால் செயற்றிறன் குறைந்து ஞாபக மறதி சிந்தனை ஆற்றல் என்பன நன்றாகக் குறையூம். இது தீவிரமடையும் போது “அல்சீமார்ஸ்” நோய் ஏற்படும். முதியவர்கள் விற்றமின் B12 ஐ அதிகளவில் உள்ளெடுப்பதால் இவ்வாறான நோய்கள் ஏற்படாது தடுக்க முடியும்.
எனவே விற்றமின்கள் அதிகளவு கொண்ட உணவுகளை இயன்றவரை எமது நாளாந்த உணவில் சேர்ப்பதன் மூலம் இவ்வாறான நோய்களிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழ முடியும்.
எனவே விற்றமின்கள் அதிகளவு கொண்ட உணவுகளை இயன்றவரை எமது நாளாந்த உணவில் சேர்ப்பதன் மூலம் இவ்வாறான நோய்களிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழ முடியும்.
0 comments:
Post a Comment