March 1, 2016

காப­னீ­ரொட்­சைட்­டையும் நீரையும் நேர­டி­யாக எரி­பொ­ரு­ளாக மாற்றும் புரட்­சி­கர செயற்­கி­ரமம்

ஒரு­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட ஒளி, வெப்பம் மற்றும் உயர் அழுத்­தத்தின் கீழ் காப­னீ­ரொட்­சைட்­டையும் நீரையும் நேர­டி­யாக ஒரே படி­மு­றையில் பயன்­ப­டுத்­தத்­தக்க ஐதரோ காபன் எரி­பொ­ரு­ளாக மாற்றும் புரட்­சி­கர முயற்­சியில் தாம் வெற்றி பெற்­றுள்­ள­தாக அமெ­ரிக்க விஞ்­ஞா­னிகள் அறி­வித்­துள்­ளனர்.
தமது இந்தக் கண்­டு­பி­டிப்பு வளி­மண்­ட­லத்­தி­லுள்ள காப­னீ­ரொட்­சைட்டை எரி­பொருள் உற்­பத்­திக்­காக அகற்­று­வ­தற்கு வழி­வகை செய்­வதால் சுற்றுச் சூழல் வெப்­ப­ம­டை­தலை தடுக்க பெரிதும் உதவும் என அவர்கள் கூறு­கின்­றனர்.
அத்­துடன் மேற்­படி எரி­பொருள் உற்­பத்தி செயற்­கி­ரமம் வளி­மண்­ட­லத்­துக்குள் ஒட்­சிசன் மீளவும் சேர்க்­கப்­ப­டு­வ­தற்கு வழி­வகை செய்­வதால் அது சுற்­றுச்­சூ­ழ­லுக்கு முற்­று­மு­ழு­தாக அனு­கூல விளைவை ஏற்­ப­டுத்தும் ஒன்­றா­க­வுள்­ள­தாக இந்த ஆய்வில் பங்­கேற்ற டெக்ஸாஸ் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த பிரெட்றிக் மக்­டொனல் தெரி­வித்தார்.
180 பாகை செல்­சி­ய­ஸி­லி­ருந்து 200 பாகை செல்­சியஸ் வரை­யான வெப்­ப­நி­லையில் 6 மடங்­கிற்கு அதி­க­மாக வளி­மண்­டல அமுக்­கத்தில் செயற்­படும் பிறப்­பாக்­கி­யொன்றில் இவ்­வாறு காப­னீ­ரொட்­சைட்டும் நீரும் தாக்­க­மு­று­கையில் நேர­டி­யாக எரி­பொருள் விளை­வாகக் கிடைத்­த­தாக விஞ்­ஞா­னிகள் கூறு­கின்­றனர்.
இந்தக் கண்­டு­பி­டிப்பு கார்கள் உள்­ள­டங்­க­லான வாக­னங்­களால் வெளி­யி­டப்­படும் புகை­யி­லுள்ள காபன் மாசுக்­களால் சுற்­றுச்­சூழல் மாச­டையும் பிரச்­சி­னைக்கும் தீர்­வாக அமை­வ­தாக அவர்கள் தெரி­விக்­கின்­றனர்.
மேற்­படி விஞ்­ஞா­னி­களின் ஆய்­வா­னது நஷனல் அக்டமி ஒப் சயன்ஸ் விஞ்ஞான ஆய்வேட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment