July 9, 2017

php - பகுதி 1


இணைய வலைப்பக்கங்களை உருவாக்குவதற்காக பயன்படுத்தப்படும் சர்வர்(Server) உரையாக்கத்தை கொண்ட ஒரு கணினி மொழியாகும். இவ் கணினி மொழியினை கற்பதற்கு முன்னர் இது தொடர்பான ஆரம்ப அறிவு கொண்ட HTML, CSS, Javascript போன்ற மொழிகளை கற்றல் சிறந்ததாகும்.

இவ் PHP இன் விரிவாக்கமாக Hypertext Preprocessor எனும் சொல் பயன்படுத்தபடுகின்றது. இது அதிகமாக பயன்படுத்தப்படும் திறந்த மூல மொழியாகும். இவற்றினுடைய ஸ்க்ரிபிட்டுகள் சர்வர் எனப்படும் சேவையகத்தில் செயல்படுத்தப்படுகின்றன. இதனை இலகுவாக தரவிறக்கம் செய்து கணினியில் பயன்படுத்திகொள்ளலாம். தற்போதைய கணினி உலகில் பெரிதாக பேசப்படும் Wordpress மற்றும் சமூகவலைத்தளத்தின் அரசன் எனப்படும் Facebook என்பன இவ் மொழியினை பயன்படுத்தியே செயல்ப்பட்டுவருகின்றன.

இவ் மொழியானது அதிகளவு பயன்படுத்த காரணமாக பின்வருவனவற்றை சொல்லி கொள்ளலாம்.

  1. இதன் மூலமாக மாறும் பக்கத்தை கொண்ட வலைதளத்தினை உருவாக்கமுடியும்.
  2. இது சர்வர் எனப்படும் சேவையகத்தினை பயன்படுத்தி கோப்புகளை திறக்கவும், வாசிக்கவும், எழுதவும், அழிக்கவும் முடியும்.
  3. இதன் மூலமாக தரவுகளை சேகரிக்க முடியும்.
  4. இதன்மூலமாக உங்களது தரவுத்தளத்தில் (database) உள்ள தரவுகளை சேர்க்கவும் அழிக்கவும் திருத்தவும் முடியும்.
  5. முக்கியமாக இது தரவுகளை உரிய முறையில் பாதுகாக்கின்றது.
இவ் PHP மொழியானது அனைத்து வகையான கணினி இயங்குதளங்களிலும் இயங்ககூடிய வகையில் செயல்படுகின்றது. உதாரணமாக (விண்டோஸ், லினக்ஸ், யுனிக்ஸ், மக் OS). அதேவேளை இவ் PHP மொழியானது பாரிய அளவிலான தரவுதளங்களில் தற்போதைய காலங்களில் பயன்படுத்தப்படுகின்றது.

ஒரு PHP ஆவணமானது Text, HTML, CSS, Javascript மற்றும் PHP code என்பவற்றை கொண்டிருக்கலாம். PHP Coding ஆனது சர்வர் இல் செயல்படுத்தப்பட்டு அதன் விளைவு HTML பக்கமாக உங்களது உலாவி (Browser) இன் ஊடக காண்பிக்கப்படுகின்றது. இதனுடைய நீட்சியாக “.php” என்பது காணப்படுகின்றது.

PHP இன் பயன்படுத்த முன்னர் உங்களது கணினியில் PHP மற்றும் MySQL  இனை ஆதரிக்கும் வெப் ஹோஸ்ட் ஒன்றினை கண்டறியவும். அதன்பின் உங்களது கணினியில் PHP மற்றும் MySQL என்பவற்றினை நிறுவுவதற்கு முன்னர் வெப் சர்வர் இனை உங்களது கணினியில் நிறுவிக்கொள்ளவும். PHP ஸ்கிரிப்ட் இனை ஆவணத்தின் எந்த பகுதியிலும் டைப் செய்து கொள்ளலாம். இவ் PHP ஸ்கிரிப்ட் ஆனது <?php என ஆரம்பித்து ?> என முடிவடையும்.



இதனை ரன் செய்ய இவ் ஆவணத்தை .php எனும் நீட்சியினூடாக சேமிக்க வேண்டும். இதேவேளை ஒரு HTML ஆவணத்தில் இவ் php பகுதியினையும் செருகி அதன்மூலமாக அதனை செயல்படுத்தமுடியும். முக்கியமாக ஒவ்வொரு php statements உம் இறுதியில் செமிக்கோலோன் எனப்படும் “;” எனும் அமைப்பினால் முடிவுறுத்தப்டும்.


மூலம் - w3school, php.net documentation 
தொடரும் பகுதி 2......

0 comments:

Post a Comment