August 6, 2014

Google Project Glass – ஒரு பார்வை



இந்தக் கண்ணாடி ஒரு சிறிய கணினியைப் (அணியக்கூடிய கணினி) போல் செயல்படுகிறது. இதில் படங்கள்,வீடியோ எடுக்கும் காமெரா, GPS உட்பட WIFI, Bluetooth முறையில் இணையத் தொடர்பு, speakers, microphone, touchpad, gyroscope, tiny screen மற்றும் Google Maps, Google+,கால நிலை அறிவது போன்ற பல வசதிகளும் உண்டு. இது தவிர siri app போன்று இந்த கண்ணாடியும் நமது உத்தரவுகளை ஏற்று செய்யக் கூடியது. அதாவது படம் பிடி, வீடியோ எடு, மொழி பெயர், செய்தியை அனுப்பு, தேடு, பயண விபரங்கள் போன்ற செய்திகளை நாம் சொல்லி செய்விக்க முடியும். அதே சமயம் சிலர் கைத்தொலைபேசியை வைத்து தவறான படங்களைப் பிடிப்பது போல், சம்பந்தப்பட்டவர்களை அறியாமலேயே படம்பிடிப்பது மிகச் சுலபமானதாகும். சமீபத்தில் பொது இடத்தில் அனுமதி இன்றி, சிலரை Google Glass கொண்டு சில விதமாகப் படம் பிடித்தவர்களை போலீசார் கைது செய்தது.

இதில் என்னென்ன பாகங்கள் எங்கே உள்ளன என்பதை கீழே உள்ள படத்தில் காணலாம்.
முதலில் சாதாரண பிரேமாக உருவாக்கப்பட்ட போதிலும்,இதில் நாம் கிட்டப்பார்வை தூரப்பார்வை என பார்வைக் குறைவு உள்ளவர்களும், மற்றும் sunglass ஐயும் பொருத்தி வைத்துக் கொள்ளலாம். சுலபமாக முன் பக்கத்தை அசைப்பதன் மூலம் அனைத்து வடிவங்களையும் தூரத்தையும் துல்லியமாக பார்க்க,படம் பிடிக்க முடிகிறது. Start Trek இரசிகர்களுக்கு ஒரு அதிசமாக இருந்தாலும், வாகனத்தில் செல்பவர்கள்,ஓட்டுனர்கள் இப்படி பலருக்கும் இது ஒரு சிறந்த உதவிதான். இந்தக் கண்ணாடி உருவாக கருவைக் கொடுத்தது Star Trek என்ற அமெரிக்க சினிமாத் தொடர் தான்விரைவில் Crossbar- nano தொழில் நுட்பம், Google apps போன்றவை இதில் சேர்க்கப்படும்.
1.      OS-android 4.0.4
2.      Lithium Polymer Battery
3.      4430 SoC DualCore
4.      16 GB Flash with 12 GB usable memory
5.      1 GB RAM
6.      MyGlass app.

வாகன ஓட்டுனர்கள்,பெற்றோர்கள்,மருத்துவர்கள் என பலருக்கு உதவினாலும் கூடகைத்தொலைபேசி, சினிமா, தொலைக்காட்சி, இணையம், சமூக தளங்கள் போன்றவற்றை தவறான வழியில் பாவிப்பதைப் போல், வளர்ந்து வரும் இது போன்ற தொழில் நுட்பத்தை தவறான வழியில் பயன்படுத்தாவிட்டால், அனைவரும் பயன் பெறுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.


                                                                                                        மூலம்:- கற்போம்

0 comments:

Post a Comment