அதிக வாகன நெரிசல் காணப்படக்கூடிய நகர்ப்பறங்களில் வாழக்கூடிய மக்களுடைய மூளையில் வாகன மாசுத்துகள்கள் சேர்வதால் அல்சைமர்ஸ் எனும் ஞாபக சக்திப் பிரச்சனை என்கின்ற நோய் மனிதனை தாக்குகிறது. இது இப்பிரச்சனைக்கான நோய்க்காரணிகளில் ஒன்றாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஐக்கிய இராச்சிய விஞ்ஞானிகள் மேற்கொண்ட இந்த ஆய்வைன் முடிவுகள் நகரவாழ்க்கையின் ஆபத்தினை சுட்டிக்காட்டுகின்றன.
அதீத வாகணப்புகையை சுவாசிப்பதால் மூச்சுத்திணறல், மாரடைப்பு போன்றவற்றால் திடீர் மரணங்கள் ஏற்படக்கூடும் என்பது நமக்கு நன்கு தெரிந்த செய்தி. தெரியாத செய்தி தற்போதைய இந்த ஆய்வு அதற்கான இன்னுமொரு நிரூபனமாக அமைந்திருக்கின்றது. சாதாரன கண்களுக்கு புலப்படாத மிக நுன் இரும்புத் துகள்கள் மூளையில் படிந்திர்ருப்பதை இந்த ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
மூளைத்திசுவின் ஒரு கிராமில் மில்லியன் கணக்கில் இத்துகள்கள் படிந்துள்ளன. எனவே மில்லியன் கணக்கில் மூளைக்கு சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. இந்த மேக்னட் துகள் எனப்படுபவை மூக்கின் வழியே உள்வாங்கப்பட்டு நுரைஈரல் ஊடாக இரத்தத்தில் கலக்கின்ன்றன, அதனினும் சிறிய துகள்கள் மூக்கை மூளையுடன் இணைக்கும் மூளைக்குச் செல்வதாக இந்த ஆய்வில் க்கண்டறியப்பட்டுள்ளது.
மூளைச் செல்களுக்கு இடையேயான தொடர்பாடலைத்தடுக்கக்கூடிய பாசி அல்லது பங்கசு போன்றன வளர்வதற்கு ஏதுவாக அமைவதால் இவை மூளையின் செயற்பாடான ஞாபக சக்தியில் பிரச்சனையை ஏற்படுத்துவதாக நம்பப்படுகின்றது.
0 comments:
Post a Comment