November 20, 2017

Symbian operating System (சிம்பியன் இயக்க முறைமை)

Symbian என்பது மொபைல் operating System ஆகும். இவ் Symbian operating System ஆனது PDAs (Personal Digital Assistant) காக 1998   இல்  Symbian Ltd இனால் உருவாக்கப்பட்டது. இவ் Symbian operating System ஆனது பெரியளவிலான மொபைல்களில் பயன்படுத்தப்பட்டது. உதாரணமாக Samsung, Motorola, Sony Ericsson மற்றும் Nokia போன்ற மொபைல்களில் பயன்படுத்தபட்டு வந்தது. 

இவ் operating System ஆனது பரவலாக ஜப்பான் நாட்டில் Fujitsu,Sharpமற்றும் Mitsubishi உற்பத்திகளிலும் அதிகளவு செல்வாக்கு செலுத்தியது. இதன் முன்னோடியாக Smartphone துறையில் இவ் Symbian operating System ஆரம்பிக்கபட்டு உலகம் பூராகவும் மிக பிரபலமான மொபைல் operating System ஆக 2010 ஆண்டு வரை தனது ஆதிக்கத்தை செலுத்தியது. இதேவேளை இக்காலகட்டத்தில் Smartphone மட்டுப்படுத்தபட்ட அளவிலே பயன்பாட்டில் இருந்தது. பிற்காலத்தில் கூகிளின் android operating System ஆனது பயன்பாட்டுக்கு வர ஆரம்பித்த பின்னர் இதன் வீழ்ச்சி தடுக்க முடியாதொன்றாகிவிட்டது.



C++ மொழி பயன்படுத்தி எழுதப்பட்ட இவ் operating System ஆனது தனது சமீபத்தில் வெளியிட்ட உற்பத்தியாக (2 October 2012) Nokia Belle Feature Pack 2 கருதப்படுகின்றது.


Smartphone சாதனங்களை ஏற்றுமதி செய்வதில் Symbian சாதனங்கள் சந்தை முன்னணியாளர்களாக விளங்கின. 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் அடிப்படையில் 2009 ஆம் ஆண்டு செய்யப்பட்ட Smartphone சாதனங்கள் ஏற்றுமதியில் Symbianசாதனங்கள் 47.2% பங்கையும், RIM 20.8% பங்கையும், Apple 15.1% (ஐ.ஓ.எஸ் மூலமாக) பங்கையும், Microsoft 8.8% (விண்டோஸ் CE மற்றும் விண்டோஸ் மொபைல்) பங்கையும் மற்றும் Android 4.7% பங்கையும்கொண்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

0 comments:

Post a Comment