May 20, 2016

பூமிக்கு சமமான 550 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு : நாசா தகவல்

பூமி போலவே அளவு மற்றும் பாறைகள் நிறைந்த 550 கோள்களை நாசா நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
கெப்ளர் என்னும் விண்வெளி தொலைநோக்கியின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி இவ்வாறான கோள்கள் இனங்காணப்பட்டுள்ளது.
சூரிய மண்டலத்தை விட்டு தொலைவில் பயணிக்கும் 1 284 புதிய கோள்களை  தொலைநோக்கியின் உதவியுடன் கண்டறிந்துள்ளனர்.
அதேவேளை, பூமியை ஒத்த அளவுடையதும் மிக அருகில் உள்ளதுமான  கோள்கள், பூமியை விட்டு 11 ஒளி ஆண்டுகள் தொலைவில் காணப்படுவது தெரியவந்துள்ளது.
அத்துடன், 9.5 டிரில்லியன் கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கோள்களின்  பயணித்தை அவதானிக்க, போதியளவு வசதியுடைய விண்கலங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லையென நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

0 comments:

Post a Comment