விஞ்ஞான வளர்ச்சியானது சாத்தியமற்றது எனக் கருதப்பட்ட பல நேற்றைய கற்பனைகளை சாத்தியமாக்கி மனிதனை வியப்பில் ஆழ்த்தியதோடு, மனிதனின் நீடித்து நிலைத்த வாழ்விற்கு அது வித்திட்டுள்ளது என்பது மிகையாகாது.
அந்தவகையில் மனித குலம் எதிர் நோக்குகின்ற சவால்கள், மற்றும் பிரச்சனைகள் போன்றவற்றைத் தீர்ப்பதற்காகவும் மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவு செய்வதற்காகவும், நாடுகளிடையேயான பலத்தை நிர்ணயிப்பதற்காகவும் விஞ்ஞானமானது விருத்தி செய்யப்பட்டது.
விஞ்ஞானத்தின் வளா்ச்சியும், தகவல் தொழிநுட்ப வளர்ச்சியும் உலகத்தை உள்ளங்கைக்குள் சுருக்கியதோடு, விண்வெளிப் பயணங்களும் எளிதாகிவிட்டது,
அத்தோடு மனித வாழ்வை இலகுவாக்கிய புதிய கண்டுபிடிப்புக்கள், மற்றும் மனித வாழ்விற்கான எல்லைகளற்ற சவால்கள் முறியடிக்கப்பட்டன, என்பன விஞ்ஞானத்தின் ஒரு முகமும், சூழல் மாசடைதல், பேரழிவு ஆயுதங்களின் வளா்ச்சி அதிகரித்துவிட்ட நோய் நிலைமைகள் மனித மனங்களில் ஏற்பட்டிருக்கின்ற பிறழ்வுகள் என விஞ்ஞானத்தின் மறுமுகமும் விஞ்ஞானத்தைப் பற்றிச் சிந்திக்கும் போது நிழலாடுகின்றது. ஆக மொத்தத்தில் இன்றைய விஞ்ஞானம் சாதித்துவிட்ட சாதனைகளும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சவால்களும் ஒரு சமாந்தரமான வளர்ச்சிப் போக்கை காட்டுகின்றன.
இன்றைய விஞ்ஞானம் ஏற்படுத்துகின்ற சாதனைகள் நாளைய எதிர்காலச் சந்ததியினா் எதிர்கொள்ளப்போகும் மிகப் பெரிய சவாலாகும் . ஒரு புறம் மனித வாழ்வை இலகுவாக்கி குறுகிய கால நன்மைகளை கொடுக்கின்ற விஞ்ஞானம் மறுபுறம் நாளைய எதிர்கால தூரநோக்கிலான சவால்களை அள்ளி வழங்குகின்றது.
நவீன விஞ்ஞானமானது பல்வேறுபட்ட துறைகளிள் மருத்துவம், இலத்திரனியல், பொறியியல், தொடர்பாடல், மூலக்கூற்றியல், விவசாயம் என ஒவ்வொன்றிலும் பாரிய புரட்சியை ஏற்படுத்த தவறவில்லை. நவீன விஞ்ஞான பரிசோதனை முறைமைகள், சத்திரசிகிச்சை வசதிகள், கதிர்வீச்சு முறைமைகள், நுண்ணுயிரியல் கண்டுபிடிப்புக்கள், மரபணு கலப்பாக்கம், குளோனிங் முறைமைகள், நவீன விவசாய யுக்திகள், தொழிநுட்ப ரீதியான கண்டுபிடிப்புகள், இணைய வசதிகள், அதிவேக போக்குவரத்து சாதனங்கள், எல்லா ஊடகத்தினுடும் (கடல் தரை ஆகாயம்) பயணிக்கும் வாகனங்கள், மூலக்கூற்று ரீதியான கல்வி முறைமை, இலத்திரனியல் கண்டுபிடிப்புக்கள் எனப் பலதரப்பட்ட அனுகூலங்களை வழங்கத் தவறவில்லை.
மறுபுறம் இன்றைய உலகம் தன்னுடைய வல்லாதிக்கத்தை நிலைநிறுத்துவாற்கு ஒரு போட்டிக் களமாக மாறிவருகின்றது. இந்தக் களத்திலே ஒவ்வொரு நாடும் தம் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவாற்கான மூலோகாயமாக விஞ்ஞானம் விளங்குகின்றது.
தொழிநுட்பம் சார்ந்த விஞ்ஞானத்தின் பெயரிலான மறைமுக யூத்தம். இன்றைய கால கட்டத்தில் நவீன போரியல் யுக்திகளில் நாடுகளிடையே நிலவும் ஆதிக்கப் போட்டியின் உச்சக் கட்ட போராட்டக் களமாக விண்வெளி சார் ஆய்வுகள் விளங்குகின்றன.
நோய்களற்ற ஆரோக்கிய வாழ்வை வழங்குகின்றன. நவீன விவசாய முறைகள், அதிகூடிய அறுவடையையும் வறட்சியையும், குளிரையும் தாங்கக்கூடிய புதிய தாவர வா்க்கங்களை அறிமுகப்படுத்தியிருக்கின்றன.
நவீன விஞ்ஞானம் காட்டி நிற்கும் வளர்ச்சி மனித குலத்தை ஒரு உச்ச விருத்தியுற்ற உயிரினக் கூட்டமாக காட்டி நிற்கின்ற போதும் அது ஏற்படுத்தியுள்ள பிரதி கூலங்களும், சவால்களும் புறக்கணிக்கத்தக்கதல்ல. வல்லமையும் அனுகூலமும் தரும் விஞ்ஞானத்தின் ஒரு முகமும், கொடூரமும் பேரழிவுகளும் நிறைந்திருகின்ற விஞ்ஞானத்தின் மறு முகமும் உலகை திடுக்கிட வைக்கின்றது.
. இன்று அணுஆயுதங்கள் ஒரு நாட்டின் வல்லமையை பறை சாற்றுகின்ற போதிலும் அதன்ன் விரைவான நாடுகளிடையேயான பரவல் கைத்தொழில் உற்பத்திகளின் விளைவான சூழலியல் மாசுபடுதல், ஓசோன் படை மெலிவடைதல், பச்சைவீட்டுத்தாக்கம், மாறுபட்ட காலநிலை, மனித மனங்களின் நவீன வாழ்க்கை முறையிலான மன அழுத்தம் காரணமாக அமைதியின்மை, அதிகரிக்கும் தற்கொலைகள், கட்டுப்படுத்த முடியாத ஆட்கொல்லி நோய்கள், பேரழிவு தரும் ஆயுதங்கள், உயிர்ப் பல்வகைமை குன்றுதல் என விஞ்ஞான தகவல் தொழிநுட்பத்தின் விளைவாலான நவீன மனிதனின் முன்னால் இருக்கின்ற சவால்களாகும்.
தன்னை தர்க்கரீதியான புலமை ரீதியான வல்லவனான மனிதன் தான் வெட்டும் குழியுள் தானே வீழ்ந்து மடியும் கொடூர நிலையாக மேற்படி சவால்கள் அமைகின்றன
. இந்த சவால்களை முறியடிப்பது மிக கடினமாக அமைந்தாலும் இது தொடர்பான விழிப்புணர்வு அதிகரிக்குமிடத்து வெற்றிகரமாக முறியடிக்கப்படலாம்..
விஞ்ஞானத்தினதும் தகவல் தொழிநுட்பத்தினதும் வளர்ச்சியால் விளையும் பிரதிகூலங்களை இயன்றவரை குறைத்து மனித இனத்தின் முன்னேற்றத்தையும் நாளைய எதிர்கால சந்ததியினரின் இருக்கையை கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்படும் கண்டுபிடிப்புக்கள் இவ் உலகிற்கு மேன்மையையும் அனு கூலங்களையும் நிறைவாக வழங்குமென்பதில் சந்தேகமற்றது..
0 comments:
Post a Comment