கோடை காலம் என்பதால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. காலம் செல்லசெல்ல வெப்பம் அதிகரிக்கிறதே இன்றி குறைந்தபாடில்லை.இதற்கு முக்கிய காரணம்புவி வெப்பமாதல் தான். புவி வெப்பமடைய காரணங்கள் பல. அவற்றுள் முக்கியமானகாரணம் மரங்களை வெட்டுவதுதான்.
மரம் என்றாலே நன்மை தான்
மரங்களும் குழந்தைகளைப் போலத் தான் விதை மண்ணில் விழுந்து சிறுசெடியாய் முளைத்து அது மெல்ல மெல்ல வளர்ந்து மரமாகிறது. ஒரு செடி மரமாக வளரகுறைந்தது 2 ஆண்டுகளாவது ஆகும். புவியில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும்ஆயுட்காலம் உண்டு. ஆனால் ஆயுட்காலம் இல்லாத ஒரே உயிர் மரம் மட்டும் தான். மனிதர்களாலும் இயற்கையாலும் எந்தவித இடையூறும் ஏற்படாத வரை மரங்கள்எத்தனை ஆண்டு காலம் வேண்டுமாலும் புவியில் உயிர்வாழ முடியும். மரங்கள் நமக்குதரும் நன்மைகள் பல. எதை எடுத்துக்கொண்டாலும் நன்மை தீமை என்று இரு பக்கம்இருக்கும். நன்மை மட்டுமே அதிக அளவில் நிறைந்திருக்கும் ஒரே உயிர் மரம் தான்.
புவி வெப்பமடைதலை தடுக்கிறது
மரங்களால் உயிரனங்கள் அடையும் நன்மைகள் பல பல. மரங்கள் புவிவெப்பமாதலைத் தடுக்கிறது. மரங்கள் வாகனங்களில் இருந்து வெளிவரும் கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை வெளிவிடுகிறது. இதனால் நமக்கு சுத்தமான காற்று கிடைக்கிறது. வாகனங்களின் எண்ணிக்கைஅதிகரித்ததாலும் அதிக கார்பன் வெளியேற்றதாலும் 2000 ஆண்டு வரை 25% மாக இருந்தபுவி வெப்பம் இன்று 37%மாக அதிகரித்துள்ளது. இவற்றை கட்டுப்படுத்தும் திறன்மரங்களுக்கு மட்டுமே உண்டு. நன்றாக வளர்ந்து முதிர்ந்த ஒரு மரம் ஒரு ஆண்டில் 48 பவுண்ட் கார்பன்-டை-ஆக்ஸைடை இழுத்துக் கொள்கிறது.
மண் அரிப்பை தடுக்கிறது
மரங்களின் வேர்கள் மண்ணில் நன்கு பிணைப்புடன் இருப்பதால் மழை காலங்களில்ஏற்படும் மண் அரிப்பை தடுக்கிறது. மேலும் மண் வளத்தை மேம்படுத்துகிறது. மரங்கள்நிழல் தருபவைகளாகவும் உள்ளது. வெயிலில் கஷ்டப்படுகிறவர்களுக்குத் தான் நிழலின்அருமை தெரியும் என்பர். அது அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய உண்மை தான். மேலும் மேசைகள் செய்யவும் வீட்டு உபயோக பொருள்கள் செய்யவும் எரிபொருளாகவும்எந்த பகுதியும் பயனற்று போகாமல் மரத்தின் எல்லா பகுதியும் பயனளிப்பவையாகஉள்ளது.
காற்றை விலைக்கு வாங்கும் நிலை
இத்துனை நன்மைகள் நிறைந்த மரங்களை நாம் சாதாரணமாக வெட்டுகிறோம். இந்நிலைநீடித்துக் கொண்டே போனால் நாம் நம் எதிர்கால சந்ததியினருக்கு சுத்தமான காற்றைவிலை கொடுத்து வாங்கும் அவல நிலையை ஏற்படுத்தி விடுவோம். நீரைவீணாக்கியதால் நம் தலைமுறையே நீரை விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காற்றிலும் இந்த நிலை ஏற்படாமல் இருக்க நாம் கவனமாக இருக்க வேண்டியது மிக மிகஅவசியம்.
நம் முன்னோர்களின் பெருமை
நம் தலைமுறை அசோகர் மரம் நட்டார் என்ற வரலாற்றை படித்து பெருமிதம் அடைகிறது. நாளைய தலைமுறை நம் முன்னோர்கள் அதாவது நாம் மரத்தை வெட்டி அவர்களுக்குபுவி வெப்பத்தை விட்டுச் சென்றோம் என்ற பெயர் நமக்கு வேண்டுமா?? நீங்களேசிந்தியுங்கள். நம் எதிர்கால சந்ததியினருக்கு வெப்பம் என்னும் தீயை விட்டுச் சென்றுஅவர்களை அவல நிலையில் ஆழ்த்த வேண்டாம். நாம் என்றும் நம் முன்னோர்களைஎண்ணியும் அவர்கள் விட்டுச் சென்ற வளங்களை எண்ணியும் பெருமிதம் அடைகிறோம். அதேபோல நம் சந்ததியினரும் நம்மை எண்ணி பெருமிதம் அடையும் வகையில்வழிவகை செய்ய வேண்டும்.
அப்துல்கலாம் ஐயா கூட மரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பலசொற்பொழிவுகளையும் மரக்கன்றுகளையும் அதிக அளவில் நட்டு உள்ளார். பிறர்நடுவதற்கு காரணமாகவும் உள்ளார்.ம் ஒன்று நாம்வைக்கும் மரம் மட்டுமே. எனவே அதிக அளவில் மரங்களை நடுவோம்!! புவிவெப்பமடைவதை தடுப்போம்!!
1 comments:
Thank you so much 👍😊
Post a Comment