மரபணுச்சிகிச்சை.
உயிரின்
அடிப்படை மூலக்கூறாகிய டி.என்.ஏ என்தை உயிரின் அடிப்படை இதுவே என்கின்றனர்
அறிவியலர்கள். மற்ற எந்த மூலகூறுகளுக்கும் இல்லாத சிறப்பியல்பாக தன்னைத் தானே
இரட்டிப்பாக்கம் செய்துகொள்வது இதன் சிறபுபியல்பாகும். டின். என். ஏ-வைப் பற்றிச் சொல்லும்போது
அடுத்து நமக்கு நினைவுக்கு வருவது ஜீன் ,து மனிதர்களின்
உடலில் உள்ள அடிப்படையான இயல்புகளுக்கு மரபணுவே முதற்காரணமாகும். அறிவியலர்களும்
அத்தகைய ஒரு பட்டியலில் மனிதர்களின் மூளைக்கு சவால் விடும் பல அத்தாட்சிகளை
சேர்த்துள்ளனர். அவற்றில் ஒன்று இந்த ஜீன் என்னும் மரபணு ஆகும்.
மரபணுவை
பயன்படுத்தி தீராநோய்களை குணப்படுத்தும் சிகிச்சைமுறையானது தறபோது
மருத்துவத்தறையில் புதிய மாற்றத்தைகொண்டுவந்துள்ளது. இந்த புதிய சிகிச்சை முறை புதிய மருத்துவ அணுகுமுறையாக அமைந்தது. மனிதர்களின் மரபணுக்களில் திருத்தம்
செய்வது அல்லது சீர் செய்வதன் மூலம் குறிப்பிட்ட நோய்க்கு சிகிச்சை அளிப்பதே இந்த
புதிய சிகிச்சை முறையாகும். இந்த புதிய சிகிச்சையை மரபணு சிகிச்சை ,து ஜீன் தெராப்பி என்று பெயர்.
.
சில Bio Tech என்ற உயிரியல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த
மரபணு சிகிச்சயை பயன்படுத்தி ஒரு சில மருந்துப்பொருட்ளை உருவாக்குகின்றது. சீரற்ற
முறையில் செயல்படும் புற்றுநோய் செல்களை சில வைரஸ்களை பயன்படுத்தி கொல்வது மரபணு
சிகிச்சையின் ஒரு துணைப்பிரிவு. அதாவது புற்றுநோய் செல்களை வைராஸால் கொல்வது. இந்த
வகை வைரஸ்கள் ஆன்கோலிக்டிக் வைரஸ் புற்று அல்லது கட்டி அழிப்பு வைரஸ் என்று
அழைக்கப்படுகின்றன. இவ்வாறு தயாரித்த ஆன்கோரினும் இத்தகைய ஆன்கோலிக்டிக்
வைரஸ்தான். உலகளவில் வர்த்தரீதியாக முதன் முதலில் விற்பனைக்கு வந்த ஆன்கோலிக்டிக்
அல்லது புற்று அழிப்பு வைரஸ் இந்த ஆன்கோரிந்தான். முதல் என்பது மட்டும் அல்ல ஒரே
வைரஸும் இதுதான்.
இம்மரபணு
சிகிச்சை என்பது பெரும்பாலான நோய்கள் நமது ஜீன்கள் மற்றும் மரபணுக்களின் உள்ள
சீர்கேடு ,செயலாக்கமின்மை என்பனவற்றால் ஏற்படுகின்றன என்ற கோட்பாட்டின்
அடிப்படையில் அமைந்தது. ஒன்றேல் பரம்பரையின் தொடர்ச்சியாக வாழையடி வாழையாக இந்த
மரபணு சிக்கல் ஒருவருக்கு அவரது குடும்பத்தினரிடமிருந்து மரபணுவில் ஒட்டிக்கொண்டு
வருகிறது அல்லது குழந்தையாக கருவாகி வளரும் பருவத்தில் ஏற்படும் மரபணு மாற்றத்தால்
(ஜீன் மியுட்டேஷன்) ஏற்படுகிறது. புற்று நோய், நீரிழிவு நோய் ஆகியவை இந்த மரபணு சிக்கலால்
ஏற்படும் நோய்களுக்கு உதாரணங்களாக சொல்லலாம்.
0 comments:
Post a Comment