December 8, 2013

பைபாஸ் (bypass) அறுவை சிகிச்சை விரைவில் வரலாற்றில் இருந்து மறையலாம்……பைபாஸ் அறுவை சிகிச்சையை இறுதியாக வரலாற்றில் செயலிழக்கச்செய்யும் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு. Tel Aviv பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஊசி மூலம் புரதத்தை செலுத்துவதன் வாயிலாக மனித இதயத்தின் குருதிக் குழாய்களை மீண்டும் வளர்ச்சியடைய செய்ய முடியும் என காட்டியுள்ளார்கள்.

இதய நோயினால் குருதிக்குழாய்கள் அடைபட்டு அல்லது முற்றாக செயலிழந்து விடும். ஓட்சிசன் இன்மையே அதிக இதய பாதிப்பிற்கு எளிதில் சான்றாகின்றது. 
TAU's Sackler மருத்துவ பாடசாலையின் டாக்டர் ப்ரிடா ஹார்டி மற்றும் அவரது ஆராய்ச்சி குழுவும் இணைந்து புரதம் சார்ந்த ஊசியை உடலில் நேரடியாக தசைகளினூடு செலுத்துவதன் மூலம் சிறிய குருதிக்குழாய்களின் மீள்வளர்ச்சியை தூண்ட முடியும் என்பதை கண்டறிந்துள்ளனர்.

இதயத்தில் புதிய குருதிக்குழாய்கள் மில்லியன் கணக்கான மக்கள் வாழ்க்கைக்கு ஒரு புதிய அத்தியாயத்தை கொடுக்க முடியும்.

"மனிதன் சார்ந்த புரத சிகிச்சை உயிரியல் தொழில்நுட்பத்‌தின் பின்னணி மிகவும் சிக்கலானது. ஆனால் இதன் இலக்கு எளிதானது மற்றும் இதற்கான தீர்வு நேரடியானது. நாம் எங்கள் மருந்தை ஓட்சிசன் பற்றாக்குறை உள்ள திசுக்களை குணப்படுத்த உத்தேசித்துள்ளோம்.

இதுவரை விலங்கு மாதிரிகளின் கால்களில் நாம் எந்த ஒரு பக்கவிளைவுகளையோ மற்றும் வீக்கங்களையோ அவதானிக்கவில்லை. சில வாரங்களில் புதிய குருதிக்குழாய்களின் வளர்ச்சி 
குருதி சுற்றோட்டத்தில் முன்னேற்றதை காட்டியது" என ஹார்டி தெரிவித்தார்.

புரதம் சார்ந்த தீர்வு குழாய்க்கு ஒரு படலம் சேர்பதாக அமையும். பொதுவாக குழாய் உட்பொருத்தலில் அதிக ஆபத்து மிக்க குருதி உறைதல் இணைந்துள்ளது.
எம்மால் குழாய்க்கு புரத பெப்டைட்(peptide) இனால் புதிய படலம் ஒன்றை உருவாக்க முடியும். முதலீட்டு இலக்குகள் எட்டப்படின்,  மேலும் இருவருடங்களுக்குள்  நச்சுத்தன்மை ஆய்வுகள் மற்றும் பரிசோதனைகளின் பாதை முடிவுறும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

ஆராய்ச்சியாளர்கள் கால் துண்டிக்கப் படுவதை தடுக்கும் ஆய்வை தொடங்கியுள்ளார்கள். மனித உடலிலுள்ள புரதங்களை  புதிய குருதி குழாய்களின் வளர்ச்சியை தூண்ட பயன்படுத்த முடியும்.

ஹார்டி பெப்டைட்களை பற்றிய ஆய்வில் அவற்றை ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை செய்து 
பின்னர் தனது ஆரம்ப முடிவை உறுதி செய்துள்ளார். பின்பு அவர் சில வேறாக்கப்பட்ட மற்றும் செயற்கை பெப்டைட்களையும், நீரழிவு உள்ள எலிகளின் செயலிழக்கும் தருவாயில் உள்ள கால்களில் பரிசோதித்துள்ளார். 

ஆயினும் நீரழிவு குருதி சுற்றோட்டத்தை குறைக்கும். ஹார்டி அவரின் சிகிச்சை இக்குறைவை எதிர்மாறாக்கும் என கண்டறிந்துள்ளார். "ஒரு குறுகிய நேரத்திற்குள் நாம் நுண்குழாய்கள் மற்றும் சிறிய குருதிக்குழாய்கள் உருவாவதை பார்த்தோம். 

மூன்று வாரங்களின் பின் அவை  வளர்ச்சியடைந்து ஏனைய குருதிக்குழாய் அமைப்புடன் ஒன்றிணைந்தன" . ஹார்டி கூறுகையில், அவரால் குறைந்த இரத்த ஓட்டம் கொண்ட எலிகளின்   குருதிக் குழாய்களை முற்றாக திரும்பப்பெற முடிந்ததோடு அவற்றின் கால்களை காப்பாற்ற முடிந்தது. 

இது பின்னர் இதய நோயாளிகளுக்கான பொருந்தும் தன்மை குறித்த ஆராய்ச்சிக்கு ஒரு குறுகிய படியாக இருந்தது. "மீள்வளர்ச்சி உண்டா இல்லையா என்பது மிகவும் வெளிப்படையாக தெரிகிறது.

எங்கள் தொழில்நுட்பம் குருதி குழாய்களை ஒரு வலையை போல மீள்வளர்ச்சியடைய செய்வதோடு மேலும் குருதி குழாய்கள் வளரும் ஒரு இதயம் பலமடையும். இது இப்போது கற்பனை செய்ய கூடியது தான், இது எட்ட கூடிய எதிர்காலத்தில் பெப்டைட் ஊசி பைபாஸ் அறுவை சிகிச்சை மாற்றீடாக அமையும்", என ஹார்டி முடித்தார். 

இவ்வாய்வறிக்கை உயிரியல் இரசாயன மருந்தாக்கவியல் இல் வெளியிடப்பட்டது.

நன்றி: தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சின் செயலாளர் திருமதி. தாரா விஜேதிலக்க

0 comments:

Post a Comment