August 15, 2017

மூன்றே நாளில் பன்றிக்காய்ச்சல் Swine flu ( H1N1 ) குணமாகியவரின் சிறப்பு பேட்டி !உலகில் மிக வேகமாக பரவி வரும் ஒரு கொடிய நோயான பன்றிக்காய்ச்சலுக்கு மருந்து தேடி பல ஆராய்ச்சி நிறுவனங்களும் மருத்துவமனைகளும் முயன்று வருகிறது, ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சித்தர்பெருமக்களுக்கு இதெல்லாம் வெறும் சாதாரன விசயம் தான். கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து மருந்து கண்டுபிடிக்கமுடியாத ஒரு வியாதிக்கு மூன்றே நாளில் குணமாக்கும் மருந்து இருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா ? ஒரு மனிதனின் உயிருக்கு சவால் விடும் நோயில் ஒன்றுதான் தான் இந்த பன்றிக்காய்ச்சல், எவ்வளவு பணம் கொடுத்தாலும் திரும்பப் பெறமுடியாத ஒன்று உண்டு என்றால் அது நேரமும் உயிரும் தான். அப்படிப்பட்ட உயிரை காப்பாற்ற வேண்டிய மருத்துவர்கள் கூட பன்றிக்காய்ச்சலை கண்டு அஞ்சுவதும், இந்த நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதற்காக தான். இனி யாரும் பன்றிக்காய்ச்சலை கண்டுபயப்பட தேவையில்லை. 1 1/2 வயது குழந்தைக்கு வந்த பன்றிக்காய்ச்சல் மூன்றே நாளில் நம் இயற்கை மருந்தின் மூலம் குணம் கிடைத்துள்ளது. இந்த குழந்தையின் தாய் ஒரு பிசியோதெரபி மருத்துவர். முதலில் குழந்தையின் தந்தை கூறும் அனுபவத்தை பார்ப்போம்.
—————–
கடந்த மாதம் 24.02.2017 அன்று குலதெய்வ பிரார்தனைக்காக சென்னையில் இருந்து சொந்த ஊரான திண்டுக்கல் சென்று அங்கிருந்து மதியம் 1 மணி அளவில் கரூர் மாவட்டத்தில் உள்ள சேங்கல் எனும் கிராமத்திற்கு சென்றோம் மறுநாள் 25.02.2017 அன்று திருச்சியில் உள்ள சமயபுரத்திற்கு சென்று விட்டு மாலை 7 மணி அளவில் திண்டுக்கல் வந்து சேர்ந்தோம், வரும் பொழுதே என் மடியில் படுத்திருந்த மகனுக்கு சிறிது காய்ச்சல் அடித்து கொண்டு இருந்தது, நாங்கள் வெளியூருக்கு சென்று வருவதால் ஏற்படும் சூழ்நிலை மாற்றாத்தால் ஏற்படும் காய்ச்சல் என்று நினைத்து வழக்கமாக கொடுக்கும் பாராசிட்டமல் 250 சிரப்பை சிறிது தந்து பாலை கொடுத்து படுக்க வைத்தோம், ஆனால் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்தான், வழக்கமாக ஏற்படுவதுதான் என நாங்களே சமாதானம் சொல்லி கொண்டு படுக்க வைத்து விட்டோம்.
மறுநாள் ஞாயிறு அன்று காலை ஏழரை மணிவரை தூங்கிய மகனை காண எனது மனைவி காலை வீட்டு வேலைகளை முடித்துவிட்டு அறைக்கு செல்ல அங்கு அவனது கண்கள் மேலே சொருகி கொள்ள கை மற்றும் கால்கள் இழுத்து கொண்டு இருந்ததை கண்ட எனது மனைவி அலறி எங்களை அழைக்க பையனை தூக்கி கொண்டு திண்டுக்கல் அரசு மருத்துவ மனைக்கு சென்றோம், மருத்துவமனை செல்லும் போதே சில விநாடிகளில் எனது மகன் சகஜ நிலைக்கு வந்தான். அதனால் மருந்து மட்டும் கொடுத்து அனுப்பிவிட்டார்கள், மறுமுறை வலிப்பு வந்தால் உள்நோயாளி பிரிவில் அனுமதிக்க வேண்டும் அறிவுறுத்தினார்கள்
சகஜ நிலையில் இருந்த அவனுக்கு மருந்தை கொடுத்து படுக்க வைத்து விட்டோம், மதியம் உணவு வேளையில் உணவளிக்க முயற்சிக்கையில் மீண்டும் வலிப்பு வந்தது, உடனடியாக அரசு மருத்துவ மனையில் அனுமதித்தோம், இரவு 12 மணிவரை பையன் நார்மலாக இருந்தான், ஆயினும் காய்ச்சல் குறையவில்லை, கூடி குறைந்தது. செவிலியர் அறிவுரையின் படி ஈர துணியினை தடவி காய்ச்சல் குறைக்க முயற்சித்தோம், ஆயினும் இரவு 12 மணிக்கு மீண்டும் வலிப்பு கண்டது, சில நிமிடங்களில் சரியானது, பிறகு 12.15 மணி மறும் 12.20 என தொடர்ந்து வலிப்பு வர ஆரம்பித்தது, அவைகள் முன்பிருந்த கால அளவை விட சற்று கூடி கொண்டே இருந்தது. ஒரு நிலையில் பையனின் மூச்சு நின்றது, க்ளுகோஸ் அப்படியே நின்றது, பயத்தால் உறைந்து போனோம். செவிலியர் மற்றும் மருந்த்துவரின் மருத்துவரின் முதல் உதவி சிகிச்சையால் நினைவு திரும்பியது.
உடனே மருத்துவர் என்னை அழைத்து நீங்கள் மதுரை அழைத்து செல்லுங்கள் எங்களால் முடியாது என கை விரித்தார். அவரிடமே யோசனை கேட்ட பொழுது மதுரை அரவிந்தர் மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அழத்து செல்ல ஆலோசனை கூறினார், ஆம்புலன்ஸ் மூலம் இரவு 3 மணிக்கு தனியார் மருத்துவமனை வந்து சேர்ந்தோம் அங்கு நான்கு நாட்கள் ஐசியுவில் தொடர்ந்த கண்காணிப்பிலும் மருத்துவத்திலும் இருந்தான், முதல் மூன்று நாட்கள் சற்று மயக்க நிலையிலேயே இருந்தான் நான்காம் நாள் அதிலிருந்து சற்று வெளிவந்தான் ஆயினும் மிகவும் சோர்ந்தவனாக இருந்தான். இந்த இடைவெளியில் காய்ச்சலுக்கான காரணத்தை அறிய அனைத்துவிதமான சோதனைகளும் மேற்கொள்ள பட்டிருந்தன, அதனுடைய ரிசல்ட்கள் அனைத்தும் நெகட்டிவ் என வந்தன, நான்காம் நாள் (H1N1) ஹெச்1என்1 பாசிட்டிவ் என வந்தது, உடனே எங்களை எல்லோரும் ஒதுக்க ஆரம்பித்துவிட்டார்கள். நர்ஸ் எல்லோரும் நோஸ் மாஸ்க் மற்றும் கையுறைகளை எங்கள் செலவில் வாங்கி அவர்கள் அணிந்து கொண்டு எங்களை பார்க்க ஆரம்பித்தார்கள்,மனதளவில் சற்று சோர்ந்து போனோம்,
அப்பொழுது ஜென்ரல் செக்கப்கிற்கு வந்த டாக்டர் இவைகள் பாரம்பரிய‌ மருத்துவத்தால் குணமடையும் என சற்று சூசகமாக தெரிவித்தார். சிறிது நேரத்தில் சுதாரித்து கொண்டு, நமது இயற்கை உணவு உலக வலைதளத்தோடு (Naturalfoodworld) சற்று பரிச்சயம் இருந்ததால் அதில் தேட ஆரம்பித்தேன், அதில் பன்றி காய்ச்சலுகான மருந்தை கண்டு பிடித்து என் மனைவியுடன் கலந்து முடிவு செய்தோம். உடனே மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேரடி வீதி சென்று அருகில் உள்ள நாட்டு மருத்துவ கடைகளில் விசாரித்து சுக்கு , கடுக்காய் தோல், நிலவேம்பு மற்றும் ஆடாதொடை, சீந்தி , பேய் புடலை என‌ அனைத்து மருந்துகளும் வகைக்கு 100 கிராம் என 6 பொருட்களையும் சமஅளவில் வாங்கி, ஆரப்பாளையம் அருகில் உள்ள எனது மனைவியின் உறவினர் வீடு சென்று அங்கு மருந்துகலவை களை உரலில் போட்டு இடித்து மிக்ஸி அடித்து தூள் ஆக்கினோம். அங்கேயே ஒரு லிட்டர் தண்ணீரில் 4 ஸ்பூன் கசாயத்தூளை சேர்த்து கொதிக்கவைத்து அது 1/4 லிட்டராக சுண்டியவுடன் கசாயத்தை, வீட்டில் இருந்த அனைவருக்கும் சற்று கொடுத்து விட்டு , உடனே மருத்துவமனை வந்து சேர்ந்தோம் உடனே குழந்தைகள் இருவர் மற்றும் பெரியவர்கள் 4 என நாங்கள் அறுவரும் மருந்து அருந்தினோம், மகனுக்கும் மட்டும் 10 மி.லி மட்டும் கொடுத்தோம் ( இந்த நாட்டு மருந்து ஒத்து கொள்ளுமோ, ஒத்து கொள்ளாதோ என்ற பயம் மனதில் இருந்தது) மற்ற அனைவரும் கால் டம்ளர் அருந்தினோம். அப்பொழுது காய்ச்சல் சுமார் 100டிகிரி முதல் 98 டிகிரி என மாறி மாறி வந்து கொண்டிருந்தது. மருந்து அருந்திய சில மணி நேரத்தில் காய்ச்சல் 99க்கு வந்தது காய்ச்சல் மீண்டும் கூடவேயில்லை. சற்று தைரியமடைந்தோம்,
அடுத்தநாள் காலை வெறும் வயிற்றில் குழந்தைகள் முதல் அனைவரும் கால் டம்ளர் அருந்தினோம். காய்ச்சல் 98 க்கு வந்தது காய்ச்சல் மீண்டும் கூடவேயில்லை. மகன் சற்று நடக்க தொடங்கினான், மருந்தை தினமும் காலை தொடர்ந்து கொடுக்க ஆரம்பிதோம், மகன் உடலில் சற்று தெம்பு கூடியது நன்றாக நடக்க தொடங்கினான் ஞாயிறு (05.03.2017) அன்று மாலை எங்களை டிஸ்சார்ஜ் செய்தார்கள். அதனோடு எடுத்த ஈஈஜி ரிசல்ட் பற்றி மருத்துவரிடம் ஆலோசித்த பொழுது வலிப்பு திரும்ப வர வாய்ப்பு உள்ளது எனவும் அதற்கான முன்னெச்சரிக்கை மருந்துகளை கைவசம் எப்போதும் வைத்திருக்க அறிவுறுத்தினார்கள். தொடர்ந்து 7 நாட்களுக்கு வலிப்பு மருந்தை தர அறிவுறுத்தினார்கள்.
செவ்வாய்(07.03.2017) அன்று காலை சென்னை வந்தோம், ஆலந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் திரும்ப மருத்துவரிடம் கலந்து ஆலோசித்தோம் அவரும் அதையே சொன்னார். வலிப்பிற்கான மருந்து நாட்களை 7 நாளில் இருந்து 21 நாள் என அதிகப்படுத்தினார். இதனால் சற்று பயந்தோம்.
அடுத்து வந்த நாட்களில் நமது இயற்கை உணவு உலகத்தில் மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொண்டேன், மறுநாள் அழைக்கும் படி பதில் வந்தது, மறு நாள், ஐயா அவர்களிடம் நடந்த நிகழ்வுகளையும், மருந்து எடுத்த விபரத்தையும் சொல்லி ஆலோசித்த பொழுது நாங்கள் எடுத்து கொண்டு இருக்கும் வலிப்பு மருந்தின் பக்க விளைவை எடுத்து சொன்னார், அவருடைய கருத்தை வலைதளத்தில் படித்து மீண்டும் உறுதி செய்து கொண்டோம்.
அவருடைய ஆலோசனையின் படி மகனுக்கு மீண்டும் ( H1N1 ) ஹெச் 1 என் 1 டெஸ்ட் செய்தோம் ரிசல்ட் நெகட்டிவ் என வந்தது. மகிழ்ச்சியோடு அவரிடம் சொன்னோம் மற்றும் வலிப்பு பற்றி விவாதித்தோம் அவர் ஆயூர்வேத மூலிகைகள் மருந்தை அனுப்புவதாக உறுதியளித்து முகவரியை குறுந்தகவல் மூலம் பெற்று கொண்டார், மறுநாள் மூலிகைகள் பொடி வந்து சேர்ந்தது, அவரின் ஆலோசனையின் படி வாரம் 3 நாள் என (ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியழன்) கசாயம் வைத்து கொடுத்து வருகிறோம். வலிப்பிற்கான மருந்தை முற்றிலும் நிறுத்தி சுமார் 5 வாரங்களாகிறது. தற்பொழுது பையன் மற்றும் வீட்டில் உள்ளோர் நலமாக உள்ளனர். அடியேன் வேலை பார்கும் சைட்டில் பெரிய ப்ரேக்டவுன் நடந்து விட்டதால், கன்வேயர் சரிசெய்யும் அந்த பணியில் ஈடுபட்டிருந்ததால் என்னுடைய அனுபவத்தை சற்று கால தாமதமாக பதிகிறேன். தாமதிற்கு மன்னிகவும்
நன்றி
பாண்டி
இந்த மூலிகை இந்த தேதியில் எடுக்க வேண்டும் என்று கூறியதும் பதில் ஏதும் கூறாமல் எத்தனையோ கடினங்களையும் தாங்கிக்கொண்டு நமக்காக மூலிகைகள் எடுத்துக்கொடுக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நாம் பெரிதாக பணமோ பொருளோ உங்களுக்கு கொடுக்கவில்லை, ஆனால் எல்லையில்லாத நம் குருநாதரின் அன்பை உங்களுக்கு கொடுக்கிறோம்.ஆரோக்கியமான மனநிம்மதியான வாழ்வை நிச்சயம் குருநாதர் உங்களுக்கு அருள்வார். இந்த வெற்றியும் உங்களால் தான் சாத்தியமாகி இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
எத்தனையோ மக்களின் உயிரை காப்ப்பாற்ற வேண்டிய மருந்துகளும் மருத்துவ முறைகளும் நம்மோடு போய்விடக்கூடாது என்பதற்காக வலைப்பூவில் பகிர்ந்துள்ளோம். நம் மேல் அன்புள்ள ஒவ்வொருவரும் இந்தத்தகவலை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் இன்னும் பல அரிய நோய்களுக்கு எளிய மருந்துடனும் குணமாகியவரின் ஆதாரத்துடனும் அவர்களின் அனுபவத்துடனும் அவன் அருளால் சந்திப்போம்.
நன்றி.

0 comments:

Post a Comment