இணைய வேகத்தைக்
கூட்டுவதற்கு சில ஆலோசனைகள்!
உலகம் முழுவதும்கொவிட் 19 பரவலால் பெரும்
எண்ணிக்கையிலான ஊழியர்கள் தமது காரியாலயவலை மற்றும்பொழுதுபோக்கிற்காக வீட்டிலிருந்து
இணையம் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது இதனால் எழும் குற்றச்சாட்டு இணைய வேகம் முன்பு போல
இல்லை என்பதுதான்.
தங்களது இணையச் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வீதம்
அதிகரித்துள்ளதாகப் பல நிறுவனங்கள்
கூறுகிறது.
இப்படியான
சூழலில் இணைய வேகம் முன் எப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்திருக்கிறது எனக்
குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எளிமையாக
இருக்கும் இவ்வாலோசனைகளைக் கடைப்பிடிப்பதனால் இணைய வேகத்தைக் கூட்ட முடியமென
சிஆராய்ச்சி நிறுவனங்கள் கூறுகின்றது.
குறிப்பாக
மைக்ரோவேவ்ஓவென் பயன்படுத்தும் போது வீடியோ அழைப்புகள் செய்வதோ அல்லது ஹெச்.டி
தரத்தில் படங்களைத் தரவிறக்கம் செய்வதோ உபந்த்தல்ல என்கிறது.
ஒய்.
ஃபை சிக்கெனல்களைக் குறைக்கும் ஆற்றல் மைக்ரோவேவ் ஓவன்களுக்கு இருப்பதாகக் கூறப்படுபிறது.
இன்டர்நெட்
ரூட்டரை அதற்கு வரும் சிக்னலில் தாக்கம் செலுத்தம் பொருள்களுக்கு அருகில் வைக்க
வேண்டாம். இன்டர்நெட் ரூட்டரிலிருந்து வரும் சிக்னல்களில் தாக்கம் செலுத்தும்
ஆற்றல் கார்ட்லெஸ் ஃபோன்கள்,
ஹாலொஜென் விளக்குகள், கம்ப்யூட்டர் ஸ்பீக்கர்கள், தொலைக்காட்சிகள்
ஆகியவற்றுக்கு உண்டு. அதனால் இணைய ரூட்டரை இதன் அருகில் வைக்க வேண்டாம்.
கான்ஃபரன்சிங் கோல்களின் போது தேவையான போது மட்டும்
வீடியோவை ஆன் செய்யுங்கள். பெரும்பாலும் ஆடியோவை மட்டுமே பயன்படுத்துங்கள். இது
உங்களது கான்ஃபரன்சிங் கால் தடைப்படாமல் இருக்க உதவும்.
சிறந்த
ப்ராட்பேண்ட் வேகத்திற்கு ஈதர்நெட் (ethernet)
கேபிள்களை நேரடியாக உங்களது கணிப்பொறியில் இணைத்துப்
பயன்படுத்துங்கள்.
கூடுமானவரைப்
பிறரை அழைக்க லேண்ட்லைனை பயன்படுத்துங்கள். கைப்பேசியில் அழைக்க வேண்டுமானால்
வைஃபை காலிங் (Wifi
Calling Setting) ஐ பயன்படுத்தலாம்..
வாட்ஸ் ஆப் பயன்படுத்தி வாய்ஸ் கால் செய்யலாம்.
ஃபேஸ்டைம், ஸ்கைப், அதுபோல
வைஃபை ரூட்டருடன் இணைக்கப்பட்டிருக்கும் தேவையற்ற சாதனங்களின் இணைப்பை துண்டித்தல்
சிறந்த்து.
ஸ்மார்ட்ஃபோன், டேப்லட்
ஆகியவை பேக்ரவுண்டில் இயங்கிக் கொண்டிருக்கும். அதனால், அந்த
சாதனங்களை நீங்கள் பயன்படுத்தாத போது வைஃபையை ஆஃப் செய்து வையுங்கள்.
நன்றி
0 comments:
Post a Comment