September 11, 2017

வண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] என்றால்என்ன?

வண்ணாத்திப்பூச்சி விளைவுவிற்கான விளக்கம்
ஒழுங்கின்மைக் கோட்பாட்டின் தந்தையான Edward Lorenz 1963 இல், இதை
"பிரேசில் நாட்டில் பறந்து கொண்டிருக்கும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகின் படபடப்பினால் ஏற்படும் சலசலப்பிற்கும், டெக்ஸாசில் ஏற்படும் சூறாவளிக்கும் தொடர்பு உண்டு" 
என்றார். இதை அவர் கணித முறைப்படியும் வானிலை மாற்றங்களின்படியும் சரியென்று நிறுவிக் காட்டினார். இதனாலேயே இந்தத் தத்துவம், 'வண்ணத்துப்பூச்சி விளைவு' (Butterfly effect) எனப்பட்டது.

வண்ணாத்திப்பூச்சி விளைவு (Butterfly effect) எனப்படுவது ஒரு கணித கருத்துரு. Dynamical system ஒன்றில் நுண்ணிய தொடக்கநிலை வேறுபாடுகளே அமைப்பின் நீண்ட கால இயக்கத்தில் பெரிய வேறுபாடு கொண்ட விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதுவே பட்டாம்பூச்சி விளைவின் சுருக்கம்.
ஆரம்பத்தில் உருவாக்கப்படும் மிகச் சிறிய ஒரு செயல், அதன் தொடர்ச்சியான சம்பவங்களால், நாம் எதிர்பார்க்கவே முடியாத மாபெரும் விளைவைத் தோற்றுவிக்கலாம்.

இதன் அடிப்படை ஒழுங்கின்மைக் கோட்பாட்டில் இருந்து ஆரம்பிக்கிறது. ஒழுங்கற்ற ஒரு அமைப்பிலோ / தொடர் செயற்பாட்டில் ஒரு ஒழுங்கை தேடுவதை விவரிப்பது தான் இந்த ஒழுங்கின்மைக் கோட்பாடு
சங்கிலித் தொடர் விளைவுகள் (Chain reactions)
வண்ணத்துப்பூச்சி விளைவுடன் சேர்த்து Domino effect, Snowball effect விளைவுகளையும் சங்கிலித் தொடர் விளைவுகள் (Chain reactions) என்ற பொதுவான தன்மைக்குள் அடக்கலாம்.
Domino effect
பல சிறிய Domino கட்டைகளை ஒன்றன் பின்னாக வரிசையாக அடுக்கி, ஒன்றைத் தட்டும்போது, எல்லாமே அடுத்தடுத்து விழும். இதுவே Domino விளைவு ஆகும். ஒருவர் பேசுவது எமது காதில் ஒலியாகக் கேட்பதும் Domino விளைவேனலாம்

Snowball effect
இது Domino effect போன்றதுதான், ஆனால் வித்தியாசம் ஒரு செயலால் உருவாக்கப்பட்ட தாக்கத்தின் விளைவு அனைத்துத் திசையிலும் பரவி இருக்கும்.
பனி படர்ந்த மலையின் உச்சத்தில் இருந்து ஒரு கையளவு உள்ள ஒரு பனி உருண்டை கீழே விழும்போது, அந்தச் சிறிய பனி உருண்டை, உருண்டு கீழே போகும்போது அண்மையில் இருக்கும் பனிகளையும் தன்னுடன் சேர்த்து, போகப்போக பெரிய பனி உருண்டையாக மாறுகின்றது. கடைசியில் இது மிகப்பெரிய பனிச்சரிவைக் கூட ஏற்படுத்த வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது.



0 comments:

Post a Comment