September 26, 2014

பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?,

அதன் அறிகுறிகள் என்ன?மேற்கு ஆப்பிரிக்காவில் வேகமாக பரவி வரும் எபோலா வைரஸ் விலங்குகளில் இருந்து தான் மனிதர்களுக்கு பரவுகிறது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியா, சியர்ரா லியோன், கினியா மற்றும் நைஜீரியாவில் எபோலா வைரஸ் தாக்கி இதுவரை 932 பேர் பலியாகியுள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் வசிக்கும் வேற்று நாட்டவர்கள் அவரவர் நாடுகளுக்கு திரும்பினால் எபோலா பல நாடுகளுக்கு பரவும் அபாயம் உள்ளது.
இந்நிலையில் மக்களை பீதியடையச் செய்யும் எபோலா வைரஸ் பற்றி தெரிந்து கொள்வோம்.

எபோலா வைரஸ் நோய் முன்னதாக எபோலா காய்ச்சல் என்று அழைக்கப்பட்டது. இந்த நோய் வந்தால் 90 சதவீதம் மரணத்தில் முடியும். இந்த நோய் மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் பரவக்கூடியது.
யாருக்கு எல்லாம்?
எபோலா வைரஸ் தாக்கியவர்களின் குடும்பத்தார், சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு இந்த நோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. எபோலா தாக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்தும் மனிதர்களுக்கு இந்த நோய் பரவுகிறது.


கண்டுபிடிப்பு
கடந்த 1976ம் ஆண்டு தான் எபோலா வைரஸ் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. காங்கோவில் உள்ள எபோலா ஆறு அருகிலும், சூடானிலும் இந்த வைரஸ் தாக்கி 280 பேர் அப்போது பலியாகினர்.


அறிகுறிகள்
எபோலா வைரஸ் தாக்கினால் காய்ச்சல், உடல் சோர்வு, தசை வலி, தொண்டை வலி, தலைவலி ஆகியவை எற்படும். இது தான் எபோலா நோயின் அறிகுறிகள்.


பின்னர்
காய்ச்சல், வலியோடு நின்றுவிடாமல் அடுத்ததாக வாந்தி, பேதி, சிறுநீரக மற்றும் நுரையீரல் செயல் இழப்பு, சில நேரம் வெளி மற்றும் உடலுக்குள் ரத்தக்கசிவு ஏற்படும்.



மனிதர்களுக்கு எப்படி?
எபோலா வைரஸ் விலங்குகளிடம் இருந்து தான் மனிதர்களுக்கு பரவுகிறது. வைரஸ் தாக்கிய விலங்குளின் ரத்தம், மலம் உள்ளிட்டவற்றில் இருந்து பரவுகிறது.


மனிதர்களிடையே
எபோலா வைரஸால் தாக்கப்பட்டவரின் ரத்தம் அல்லது மல, ஜலத்தில் இருந்து பிற மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவுகிறது.


21 நாட்கள்
எபோலா வைரஸ் தாக்கி அறிகுறிகள் தெரிய 2 முதல் 21 நாட்கள் வரை கூட ஆகலாம்.




சிகிச்சை
எபோலா நோய்க்கு இது தான் சிகிச்சை என்ற ஒன்று இல்லை. இருப்பினும் தீவிர சிகிச்சை மூலம் சிலர் குணமடையலாம்.


தடுப்பு மருந்து
எபோலா நோயை தடுக்க மருந்துகள் பரிசோதனை செய்யப்பட்ட போதிலும் அவை சந்தையில் தற்போது இல்லை.




1 comments:

Does your blog have a contact page? I'm having trouble locating it but, I'd like to send you
an e-mail. I've got some creative ideas for your
blog you might be interested in hearing. Either way, great
website and I look forward to seeing it grow over time.


my site Johnny Rapid

Post a Comment