January 1, 2017


IP முகவரி 




IP எனும் Internet protocol இணையத்தினூடாக தகவல் அனுப்புவது பெறுவது தொடர்பான நிலையான விதிகளின் தொகுப்பு எனக் கூறலாம். இவை வெவ்வேறு தளங்களில் இயங்கும் சாதனங்களை இணையதினூடாக இணைக்கப்படும் சந்தர்பங்களில் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள அனுமதியளிக்கின்றது.

இது IPV4 (Internet protocol version 4) மற்றயது IPV6 (Internet protocol version 6) என்பவற்றை சார்ந்தவையாக காணப்படலாம். இது பொதுவாக இணையத்தில் இணைந்திருக்கும் சாதனங்களை வகைகுறிக்கும் தனிப்பட்ட (Unique) பயன்பாட்டு அமைப்பாகும். இதேவேளை இவ் Internet protocol ஆனது இரு சாதனங்களுக்கு இடையே Data packets மாற்றும் அடிப்படை விதிமுறைகளையும் நமக்கு வழங்குகின்றது.
இருப்பினும் உண்மையில் இந்த IP ஆனது இணைய இணைப்பை ஏற்படுத்தவோ அல்லது Data packets மாற்றப்படும் சந்தர்ப்பங்களை ஒழுங்குபடுத்துவதோ இல்லை ஆனால் இதனை கையாள Transmission control protocol (TCP) எனும் அமைப்பானது காணப்படுகின்றது. இது Internet protocol இனை இணைத்து இணையத்தில் இரு சாதனங்களுக்கு இடையே தரவை மாற்றி ஒழுங்கமைக்க உதவுகின்றது. இதனை TCP/IP தொடர்பு என பொதுவாக நாம் அழைக்கின்றோம்.

இவ் IPV4 ஆனது நான்கு பகுதிகளான இலக்க தொகுதியை உடையது. இவ் ஒவ்வொரு பகுதியிலும் மூன்று இடப்பெறுமான எண்களை 0 தொடக்கம் 255 வரை இட்டு கொள்ளலாம். இவை அனைத்தும் ஒரு புள்ளியினை அடிப்படையாக கொண்டு வேறுபிரிக்கப்படும். உதாரணமாக இக் கட்டுரை மொழிபெயர்க்கபடும் techterms.com எனும் வலைத்தளத்தின் IP முகவரியாக 67.43.14.98 காணப்படுகின்றது. இவ் இலக்க தொடரானது techterms எனும் வலைத்தளத்தினை இணையத்தில் காண உதவுகின்றது.

நீங்கள் உங்களது இணைய உலாவியில் (Internet web browser) இல் ஒரு வலைத்தளத்தினுள் பிரவேசிக்க அவ் வலைத்தளத்தின் முகவரியை இனை டைப் செய்யும்போது DNS (Domain name System) எனப்படும் அமைப்பானது உங்களது இணையதள முகவரியை IP இலக்கங்களாக மாற்றி அவ் IP முகவரிக்குரிய வலைத்தளத்தினை எமக்கு அணுக வசதியளிக்கின்றது.



google image இலிருந்து எடுக்கப்பட்டது


இணைய தகவல் மற்றும் Domain Name களை பதிவு செய்து வழங்கும் InterNIC (Internet Information centre) எனும் நிறுவனமானது இவ் IPV4 இனை மூன்று வகுப்புக்களாக பிரித்துள்ளது. இதில் சிறிய வகுப்பு C யில் 256 IP முகவரிகள் காணப்படுகின்றன. உதாரணமாக 123.123.123.XXX என்றவாறு இது அமையப்பெறும். இதில் XXX என்பதில் 0 தொடக்கம் 255 வரையான இலக்கங்கள் இங்கே வரலாம். அடுத்த வகுப்பு B யில் 65536 IP முகவரிகள் உருவாக்கலாம். உதாரணமாக 123.123.XXX.XXX என்றவாறு இது அமையப்பெறும். இறுதியாக வகுப்பு A யில் 16,777,216 IP முகவரிகள் உருவாக்கலாம். உதாரணமாக 123.XXX.XXX.XXX என்றவாறு இது அமையப்பெறும். ஆகவே மொத்தமாக IPV4 000.000.000.000 இருந்து 255.255.255.255 வரையான 4,294,967,296 IP முகவரிகளை உருவாக்கலாம்.


இருப்பினும் அதிகரித்து வரும் தொழில்நுட்ப சாதனங்களின் வளர்ச்சி காரணமாக IPV4 ஆனது IPV6 என்ற முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதில் IPV4 இணைக்கப்பட்ட சாதனங்களை விட பாரியளவு IP முகவரிகளை உருவாக்கி இணையத்தில் இணைத்து கொள்ளலாம். IPV4 இல் 32bit IP முகவரியானது IPV6 இல் 128bit IP முகவரியாக வளர்சியடைந்து 340,000,000,000,000,000,000,000,000,000,000,000 IP முகவரிகளை உருவாக்ககூடியளவு மாற்றம் பெற்றுள்ளது. இவ் IPV6 அமைப்பானது எட்டு “hhhh” என்ற நான்கு hexadecimal number இனை கொண்டதாகும். இது 0 தொடக்கம் 9 வரையும்  A தொடக்கம் F வரையும்  அமைந்து காணப்படும். உதாரணமாக F704:0000:0000:0000:3458:79A2:D08B:4320 என்றவாறு இது அமையப்பெறும்.

Source : http://techterms.com/
Source link : http://techterms.com/definition/ip_address
                     http://techterms.com/definition/ipv6

0 comments:

Post a Comment