October 3, 2013

மரபணு தொழில்நுட்பத்தில் புதிய சோயா அவரை; இலங்கை விஞ்ஞானி கண்டுபிடிப்பு


மரபணு தொழில்நுட்பத்தின் ஊடாக அதிக விளைச்சலை தரக்கூடிய சோயா அவரை வகையை உற்பத்தி செய்வதற்கு புதிய முறையொன்றை எமது நாட்டு விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
மரபணு தொழில்நுட்பத்தின் ஊடாக சோயா அவரை வகையொன்றை மீள் உற்பத்தி செய்யும் நடவடிக்கை மிகவும் கடினமானது என சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் விவசாய ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் யசரத் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
விசேட தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த புதிய முறையை கண்டுபிடித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதன் ஊாடாக புதிய வகை சோயா அவரை வகையொன்றை அறிமுகப்படுத்த முடியும் என சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் விவசாய ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment