உலகின்
முதன்முறையாக புற்றுநோய் கட்டிகளை தாக்கி அழிக்கும் நனோ ரோபாடிக்ஸ் என்ற
சிகிச்சை முறையை தென் கொரிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் பெரும் பிரச்னையாக புற்றுநோய் உருவெடுத்து வருகின்றது. இந்நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரையிலும் இந்நோய்க்கு சரியான மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை, ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. கீமோதெரபி(chemotherapy) மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டாலும், முழுமையாக குணமடையாது,
இந்நிலையில் நனோ ரோபாடிக்ஸ் என்ற தீங்கு விளைவிக்காத சிகிச்சை முறையை தென்
கொரியா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இச்சிகிச்சையில், மரபணுக்கள் மாற்றப்பட்ட நச்சுதன்மையில்லாத
பக்டீரியாக்களில் நுண்ணிய காப்சூல்களில்(capsule), மருந்துகள் நிரப்பட்டு நேரடியாக
புற்றுநோய் கட்டிகளில் செலுத்தி விடுகின்றனர். இந்த மருந்துகள் புற்றுநோய் கட்டிகளை மட்டும் தாக்கி அழித்துவிடுகின்றன.
இச்சிகிச்சையை முதன்முதலில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எலிகளின் மீது
செயல்படுத்தப்பட்டது. அப்போது எலிகளின் புற்றுநோய் கட்டிகள் உடைந்து சிறந்த பலனளித்துள்ளதால்,
மனிதர்களுக்கும் நல்ல பலனை தரும் என முன்னணி ஆராய்ச்சியாளர் பார்க் ஜோங் ஓ
தெரிவித்துள்ளார்.
இந்த நவீன தொழில்நுட்பம் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் முன்பே காப்புரிமை பெற்றிருந்தாலும் மனிதர்களிடம் பயன்படுத்த இன்னும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இதனைதொடர்ந்து திடவடிவம் கொண்ட புற்றுநோய்கள் என கருதப்படும் பெருங்குடல் புற்றுநோய் கட்டிகள் அல்லது மார்பக புற்றுநோய் கட்டிகளை அழிப்பதற்காக “பக்டீரியா ரோபோட்” என்ற சிகிச்சையளிக்கப்படும்.இதுகுறித்து தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் மற்ற வகை புற்றுநோய்களுக்கும் சிகிச்சையளிக்க முடியும் என ஆராய்ச்சியாளார்கள் நம்பிக்கை அளித்துள்ளனர்.
|
0 comments:
Post a Comment