பொருட்களை வைத்த இடத்தை மறந்துவிட்டு தேடுபவர்களுக்கு உதவும் வகையில் மைக்ரோசொப்ட் நிறுவனமானது புதிய தொழில்நுட்பமொன்றைக் அறிமுகப்படுத்தியுள்ளது.
உயர் தொழில்நுட்ப மூக்குக் கண்ணாடி வடிவிலான இந்த ஹோலோலென்ஸ் உபகரணம் பயன்பாட்டாளருக்கு அவர் தேடும் பொருளை அதி விரைவாக தேடிக் கண்டுபிடித்து காண்பிக்கிறது.
உதாரணத்துக்கு கார் சாவியைத் தொலைத்து விட்டு தேடும் பயன்பாட்டாளர் அதற்கு அதனையொத்த சாவியொன்றை காண்பித்து அது மாதிரியான பொருளைக் கண்டுபிடிக்க கட்டளையிடுகையில், அவர் அந்தக் கண்ணாடியை அணிந்திருக்கையில் சாவியை எங்கு வைத்தார் என்பதை சுயமாக ஞாபகப்படுத்தி அவருக்கு அது இருக்கும் இடத்தைக் காண்பிக்கிறது.
பத்திரிகையொன்றுக்கு கீழ் அந்த சாவி இருக்கும் பட்சத்தில் அதனை மேற்படி கருவி தனது ஞாபகத்துக்கு கொண்டு வந்து அது தொடர்பில் பயன்பாட்டாளருக்கு அறிவிக்கிறது.
அத்துடன் பயன்பாட்டாளர் பொது இடத்தில் தனது பணத்தைக் கொண்ட சிறு கைப்பையை தவறவிட்டு வரும் போதும் அது தொடர்பில் அந்த உபகரணம் பயன்பாட்டாளருக்கு எச்சரிக்கிறது.
0 comments:
Post a Comment