March 3, 2017

இணைய வலையமைப்பில் பயன்படுத்தப்படும்

 சில சாதனங்கள் தொடர்பான விளக்கங்கள்.





HUB

இணைய வலையமைப்பில் பயன்படுத்தப்படும் சாதனங்களில் மிகவும் எளிமையான சாதனம் இவ் HUB ஆகும். இவ் HUB ஆனது தரவுகளை வடிகட்டும் முறையினை செய்யாது இதனால் தரவானது வலையமைப்பில் இணைந்திருக்கும் அனைத்து சாதனங்களுக்கும் இதனுடாக அனுப்பபடும். HUB இனால் தரவு செல்லகூடிய மிகச்சிறந்த வழியினை புத்திசாலிதனமாக தெரிவு செய்ய முடியாத சந்தர்பம் உள்ளது. இதனால் நேர விரயமும் செயல்திறன் இழப்புகளும் ஏற்படுகின்றது. இதன் தரவு பரிமாற்ற வேகம் மிக குறைவு என்ற காரணத்தினால் இது பெரிய இணைய வலையமைப்புகளில் பயன்படுத்தப்படுவதில்லை.

BRIDGE

HUB உடன் ஒப்பிடுகையில் BRIDGE ஆனது மிகவும் சிக்கலான சாதனமாகும். BRIDGE இனுள் தரவு ஒரு வழியில் பெறப்பட்டு பல வழிகளில் வெளிச்செல்கின்றன. BRIDGE ஆனது தரவுகளை அனுப்பும்போது HUB போன்று அல்லாமல் தரவுளை அனுப்பும்முன் இலக்கு நோக்கி கவனம் செலுத்தும். இலக்கு தொடர்பாக ஏதேனும் பிரச்சனை காணப்படும் சந்தர்பத்தில் மற்றைய வலையமைப்பு பகுதிகளின் ஊடாக தரவுகளை பரிமாற்றி கொள்ளும். அத்துடன் இவ் BRIDGE சாதனம் ஆனது இரு வலையமைப்புகளை பிரிக்கும் அமைப்பாக தொழிற்படும் அதேவேளை வலையமைப்பினுள் தொடர்பு கொள்ளாது ஆனால் இது தொடர்ந்து இணைப்பில் இணைக்கபட்டிருக்கும்.



SWITCH

BRIDGE உடன் ஒப்பிடும்போது SWITCH இல் பல Ports கள் காணப்படும். SWITCH ஆனது தரவு பகிர்தலில் முன் பிழைகளை சரிபார்த்து கொள்ளும். இவ் SWITCH வகைகளை  பொருட்டு  இது  இரு விதமான லேயர்களுக்கு ஆதரவளிக்கும். ஒன்று MAC முகவரிக்கும் மற்றையது IP முகவரிக்கும்  ஆகும். பொதுவாக பெரிய வலையமைப்புகளில் இவ் SWITCH ஆனது HUB இற்கு பதிலாக அதே Sub net இல் பயன்படுத்தப்படுகின்றது.


ROUTER

ROUTER ஆனது SWITCH போன்றே IP முகவரியினை அடிப்படையாக கொண்டு தரவுகளை உரிய சாதனங்களுக்கு அனுப்பும். இது வேறுபட்ட WAN தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் சாதனமாக அமையும் ஆனால் SWITCH அவ்வாறு தொழிற்படாது. பல கணினி வலையமைப்புகள் ஒரே ROUTER இல் இணைக்கப்பட்டிருக்கும் அதேவேளை இது இணையம் முழுவதும் போக்குவரத்துக்கு வழிகாட்டி போன்றும் இது தொழிற்படுகின்றது. தனக்குள் வரும் தரவுகளை IP முகவரியை கொண்டு சரியான இலகு பாதையை தெரிவு செய்து அதன் மூலமாக தரவுகளை உரிய வகையில் அனுப்பிவைக்கும். 


REPEATER

பொதுவாக SWITCH மற்றும் HUB போன்றவற்றில் இவ் REPEATER ஆனது நிரந்தரமாக அமையப்பெற்றிருக்கும். இது தகவல் சிக்னல்கள் ஆனது நீண்ட கேபிள்களின் ஊடக வலுக்குறையும் சந்தர்பத்தில் அதனை மீள பெருக்க மற்றும் சிக்னலை மீண்டும் அனுப்பிவைக்க இது உதவுகின்றது.



மூலம் : http://www.teqlog.com

0 comments:

Post a Comment