காலநிலை மாற்றத்தை குறைப்பதற்கோ அல்லது
ஒத்துப்போவதற்கோ எந்தவொறு விதத்திலும் நீங்கள் உதவி செய்ய முடியாத பின்வரும் வழிகளை நாங்கள் கடைபிடிக்க முடியும்.
அதிக நேரத்திற்கு ஒளியூட்ட வேண்டின்,
CFL மின்குமிழ்களை பயன்படுத்தவூம். CFL மின்குமிழ்களை பயன்படுத்துவதன் மூலம் மின்சக்திப் பாவனையை 80% மாகக் குறைக்கலாம்.
தொலைக்காட்சி, ஒளிப்படக் கருவி (video set-ups), ஒலிக் கருவி (stereo set-ups) மற்றும் கணணிகளின் மின் தொடுப்பினை பாவனையில் இல்லாத போது
கழற்றிவிடவூம். துண்டித்தல் மட்டும் போதுமானதல்ல ஏனெனில் அவ்வாறு அறுக்காவிடின் 10%
- 60% சக்தி தொடர்ச்சியாக நுகரப்பட்டுக்கொண்டிருக்கப்படும்.
நகல் கருவிகள் மேலும் தொலைக்காட்சிகள் பாவனையிலற்ற போது துண்டித்து மின் தொடுப்பு
அகற்ற வேண்டும். ஒளி தேவையற்ற போது மின் குமிழ்கள் துண்டிக்கப்பட வேண்டும்.
பாவனையில்லாத எல்லா மின் இலத்திரனியல் சாதனங்களினதும் தொடுப்பு அறுக்கப்பட
வேண்டுமென்பதை மறக்க வேண்டாம்.
குறுகிய பயணங்களை நடந்து அல்லது
துவிச்சக்கர வண்டியினை பயன்படுத்தி மேற்கொள்ளவும். தனியொருவராகப் பாயணிக்கும் போது
பொதுப் போக்குவரத்தைப் (பேருந்து அல்லது புகையிரதம்) பாவித்தல் சிறந்ததோர்
முறையாகும்.
குளிர்சாதனப் பெட்டியை அடிக்கடி
திறப்பதையும் அதன் கதவினை அதிக நேரம் மூடாது வைத்திருப்பதையும் தடுக்கவும். உணவு
வகைகள் சூடாக இல்லாமல் ஓரளவு குளிர்ந்த பின் குளிர்ச்சாதனப்பொட்டியினுள்
வைக்கவும். அடிக்கடி அல்லது ஒழுங்கான கால
இடைவெளிகளில் குளிர்ச்சாதனப் பெட்டியின் உறைப்பனியினை நீக்கவும். குளிர்சாதனப் பெட்டியையும்
அதி உறை கருவியையும் (Deep Freezer) அடுப்பு அல்லது
சூட்டடுப்பிற்கு (Oven) அண்மையில் வைக்கவேண்டாம்.
கடதாசியினைப் பத்திரப்படுத்தவும்.
கடதாசியின் இருபக்கங்களிலும் எழுதவும். சீர்த்திருத்தங்கள் செய்யாமல் நகலை ஏடுகளை
அச்சிட வேண்டாம் கடிதங்களுக்குப் பதிலாக SMS சேவையினைப் பாவிக்கவும். கடதாசியின் ஒருபக்கம்
பாவிக்கப்பட்டிருப்பின் மற்றைய பக்கத்தை குறிப்புக்கள் எழுததுவதற்கு
பயண்படுத்தவும்.
பொலித்தீன் பைகளின் பாவனையை ஏற்றவரை
குறைக்கவும். கடதாசி; துணி அல்லது தோலினாலான பைகளை
எப்போதாவது ஏற்றவரையில் பாவிக்கவும்.
நீரை வீணாக்க வேண்டாம். பற்களை
விளக்கும் போதும், உடலைக் கழுவூம் போதும், சமையற் பாத்திரங்களுக்கும் மற்றும் ஆடைகளுக்கும் சவர்க்;காரம் மற்றும் துய்மைப் பொருள் பயன்படுத்தும் போதும் நீர் குழாய்
வாய்யினை மூடவும். வீடுகளுக்கு பாரியளவில் சக்தி விரயமாகி நீர் வழங்கப்படுவதை
மறக்க வேண்டாம்.
நச்சு இரசாயன விசிறிகளின் (Spray)
பாவனையைக் குறைக்கவும். குறைந்த உயிரியல்
பாதிப்பினை ஏற்படுத்தும் இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தவும்.
மரங்களை நடவும். மரங்கள் வளிமன்டல
காபனீரொட்சைடை உறிஞ்சும் என்பதை எப்பொழுதும் மனதில் வைத்திருக்கவும். ஆகவே இதனால்
தேவையில்லாத போது மரங்களை வெட்ட வேண்டாம்.
ஆடைகளையும் தட்டுக்களையும் கழுவும்
கருவிகள்; குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும்
அடுப்புக்களை வாங்கும் போது சக்தி காப்புச் சாதனங்கள் பாவிக்கப்படுவதை
கட்டாயப்படுத்தவும். மேலும் சக்தி திறனுள்ள
வாகனங்களையும் இசைக்கருவிகளையும் வாங்கவும்.
இயற்கை ஒளியுட்டல் மற்றும் காற்றோட்டம்
வீடுகளில் கடைப்பிடிக்க உருதிப்படுத்தவும். இது உடல் நலம் மட்டுமின்றி
சுற்றாடலையும் பாதுகாக்கின்றது.
காபன் வெளியீட்டுக்களைக் குறைக்கவும்
0 comments:
Post a Comment