இளம் வயதில் நோபல் பரிசு பெறுபவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசப்சாய்.
2014ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை டெல்லியைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்தியுடன் சேர்ந்து 17 வயதே ஆகும் பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசப்சாய் பெறுகிறார்.
இதன் மூலம் மலாலா புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.
இளம் வயதில்
17 வயதில்
அதாவது இவ்வளவு இளம் வயதில்
நோபல் பரிசு பெறும் முதல்
நபர் மலாலா தான் என்பது
குறிப்பிடத்தக்கது.
பிராக்
ஆஸ்திரேலியாவில்
பிறந்த இங்கிலாந்து இயற்பியலாளரான வில்லியம் லாரன்ஸ் பிராக் எக்ஸ்
ரே மூலம் கிரிஸ்டல் உருவத்தை
ஆய்வு செய்ததற்காக தனது தந்தை வில்லியம்
ஹென்றி பிராகுடன் சேர்ந்து தனது 25 வயதில் நோபல்
பரிசு பெற்றார்.
1915
தனது
25வது வயதில் கடந்த 1915ம்
ஆண்டு பிராக் இயற்பியலுக்கான நோபல்
பரிசை பெற்றார். பிராக் தான் இளம்
வயதில் நோபல் பரிசு பெற்றவர்
என்ற பெருமையை முதன்முதலில் பெற்றார்.
முறியடிப்பு
பிராகின்
99 ஆண்டு கால சாதனையை மலாலா
முறியடித்துள்ளார்.
முதியவர்
ரஷ்யாவின்
மாஸ்கோ நகரில் பிறந்த பொருளாதார
நிபுணர் லியோனிட் ஹர்விச் தனது 90வது
வயதில் நோபல் பரிசு பெற்றார்.
நோபல் பரிசு பெற்ற மிகவும்
வயதானவர் ஹர்விச் தான்.
0 comments:
Post a Comment