May 3, 2016

எலியின் முதுகில் மனிதக்காது விருத்தி

ஜப்­பானைச் சேர்ந்த விஞ்­ஞா­னிகள் எலி­யொன்றின் முதுகில் மனித காதொன்றை வெற்­றி­க­ர­மாக வளர்ச்­சி­ய­டையச் செய்­துள்­ள­தாக உரிமை கோரி­யுள்­ளனர்.
இந்த செயன்­மு­றையைப் பயன்­ப­டுத்தி வளர்ச்­சி­ய­டையச் செய்­யப்­படும் காது­களை எதிர்­வரும் 5 வருட காலத்­துக்குள் மனி­தர்­களில் பயன்­ப­டுத்த முடியும் என நம்­பு­வ­தாக டோக்­கியோ மற்றும் கயோட்டா பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.
இந்தக் காது­களை பிறப்பு ரீதி­யிலும் நாய்­களால் கடித்துக் குத­றப்­பட்டும் காது­களை இழந்த சிறு­வர்­க­ளுக்கு பொருத்தி அவர்­க­ளுக்கு இயல்பு வாழ்க்கை வாழ்­வ­தற்கு உத­வி­ய­ளிக்கக் கூடி­ய­தாக இருக்கும் என எதிர்­பார்ப்­ப­தாக அவர்கள் கூறு­கின்­றனர்.
அது மட்­டு­மல்­லாது போர்களிலும் விபத்­துக­ளிலும் காது­களை இழந்­த­வர்­க­ளுக்கும் இவ்­வாறு ஆய்­வு­கூ­டத்தில் விருத்தி­செய்­யப்­படும் காதுகள் உதவும் என அவர்கள் தெரி­விக்­கின்­றனர்.
தற்­போது நடை­மு­றையில் காது­களை இழந்­த­வர்­க­ளுக்கு காது கட்­ட­மைப்பை உரு­வாக்கும் செயற்­கி­ர­மத்தின் போது நோயா­ளியின் விலா எலும்­பு­க­ளி­லி­ருந்து பெறப்­பட்ட கசி­யி­ழை­யத்தைப் பயன்­ப­டுத்­தியே காதுகள் விருத்தி செய்­யப்­ப­டு­கின்­றன.
இவ்­வாறு விலா எலும்பு கசி­யி­ழையம் அகற்­றப்­ப­டு­வது ஆறாத புண் ஏற்­பட்டு நோயாளி துன்பப்­ப­டு­வ­தற்கு வழி­வகை செய்­வ­தாக உள்­ள­துடன் இந்த செயன்­மு­றைக்­காக நோயாளி ஒரு தொகை அறு­வைச்­சி­கிச்­சை­க­ளுக்கும் உட்­பட நேரிடுகிறது.
இந்­நி­லையில் புதிய காது விருத்தி முறை­மையில் விலா எலும்பு கசி­யி­ழை­யத்­துக்குப் பதி­லாக மாதிரிக் கலங்கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக விஞ்­ஞா­னிகள் கூறு­கின்­றனர்.
ஆய்­வு­கூ­டத்தில் புதிய தொழில்­நுட்­பத்தைப் பயன்­ப­டுத்தி விருத்தி செய்­யப்­படும் காதுக்கான அடிப்.படைக்கூறுகள் காது வடிவான பிளாஸ்டிக் கட்டமைப்பில் உட்செலுத்தப்பட்டு எலியொன்றின் முதுகில் பொருத்தப்பட்டு வளர்ச்சியடையச் செய்யப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

0 comments:

Post a Comment