August 28, 2017

DNA வில் ஒரு கணணி வைரஸ்

வாசிங்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள், DNA ஐ பயன்படுத்தி கணனியில் malware ஐ நிறுவி அந்தக் கணணியை கட்டுப்படுத்தமுடியும் என்று காட்டியுள்ளனர்.  இவர்களது பிரதான நோக்கம், DNAவில் கணணி ப்ரோக்ராம் கோடுகளை வடிவமைக்க முடியுமா என்று ஆய்வு செய்வதே.


உயிரினத்தின் பிரதான அடிப்படைக் கட்டமைப்பான DNA நியுக்கிளியோடைட்டுகள் எனப்படும் கட்டமைப்பால் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றில் நான்கு வகையுண்டு. A, C, G மற்றும் T. இந்தக் கட்டமைபுகளிலேயே DNA தகவல்களை சேமித்துவைத்துள்ளது. DNA sequencing (DNA வரன்முறையிடல்) எனப்படுவது DNA வில் உள்ள நியுக்கிளியோடைட்டுக்களின் வரிசையைக் கண்டறியும் முறையாகும். இந்த வரிசையைக் கண்டறிவதன் மூலம், விஞ்ஞானிகளால் அதிலிருக்கும் உயிர்மரபுத் தகவல்களை இனங்கண்டு ஆய்வுசெயயமுடியும்.



DNA sequence செய்யப்பட்ட பின்னர், பொதுவாக தற்போது கணணி ப்ரோக்ராம்களே DNA இல் உள்ள தகவல்களை ஆய்வுசெய்கின்றன. இப்படியான கணனித் தொழில்நுட்பத்தின் மூலம் மில்லியன் கணக்கான DNA மூலக்கூறுகளை ஒரே நேரத்தில் ப்ரோசெஸ் செய்யலாம். இப்படியாக ப்ராசெஸ் செய்யும் சாப்ட்வேர் ஒன்றில் இருக்கும் குறையை தாக்கி அதன் மூலம் கணணியை கையகப்படுத்தும் வழியிலேயே இந்த DNA malware உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை ஆய்வுசெய்த விஞ்ஞானிகள், “உயிர்மூலகூற்று தகவல்களுக்கும் அதனை ஆய்வு செய்யும் கணணி சிஸ்டங்களுக்கும் இடையில் எப்படியான ஆபத்துகள் வரக்கூடும் என்பதை ஆய்வுசெய்வதே இதன் நோக்கம்” என்று கூறியுள்ளனர்.
கேட்பதற்கு விஞ்ஞான புனைக்கதையில் வரும் சம்பவம் போன்று இருந்தாலும், இது உண்மையிலேயே தற்போது சாத்தியம் என்பது சற்றே வியப்பான விடயம்தான்.

0 comments:

Post a Comment