August 7, 2017

விண்டோஸ் இயங்கு தளம் - 1

(Windows Operating System 1)
விண்டோஸ் என்பது  மைக்ரோசாஃப்ட் (Microsoft)  எனும் தனியார் மென்பொருள் உற்பத்தி நிறுவனம் தயாரித்து வெளியிடும் ஒரு வகை  இயங்குதளமாகும்.  மைக்ரோசாப்ட் (Microsoft)  முதன் முதலில்  1985  நவம்பரில் மைக்ரோசாப்ட்  டாஸ் (Microsoft DOS)  என்ற  இயங்குதளத்தின் பெயரில் வெளியானது. மைக்ரோசாப்ட் விண்டோஸ் பிரத்தியோகக் கணினிகளில் தொண்ணுறு சதவீதத்திற்கும் (90-%) மேலாக சந்தையைக் கைப்பற்றியது.



கணினியில் அல்லது கைபேசியில் ஒவ்வொரு பயன்பாட்டுக்கும் ஒரு மென்பொருள் (Software) தேவைப்படுவதைப்போல ஒட்டு மொத்த கைபேசியையோ கணினியையோ நிர்வகிக்க ஒரு Software பயன்பாடு தேவை. அதனை நாம் இயங்குதளம் (Operating System) என்று அழைக்கின்றோம் இதனை சுருக்கமாக OS என்றும் அழைக்கின்றார்கள்.

பலரும் பொதுவாக அல்லது அதிகமாக கணினியில் பயன்படுத்தும் OS  ஆனது Windows ஆகும். அதாவது மைக்ரோசாஃட் என்ற நிறுவனம் தயாரித்து வெளியிடும் இயங்கு தளம் Windows என்ற பெயரில் வருகிறது. நீங்கள் கணினியை On செய்த உடனே கணினியில் Windows என்று காட்டும். இந்த இயங்கு தளம் முதலில் செயல் பட ஆரம்பித்த பின் மற்ற பயன்பாடுகளை நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.



Mobile Phone ஐ நீங்கள் முதலில் on செய்யும் போது புதிய வகை Mobile Phone இருந்தால் Android என்று காட்டும். Mobile Phone வாங்கப்போகும் போதும் Android version போட்டிருப்பார்கள். அதாவது அந்த கைபேசியில் Android இயங்குதளம் உள்ளது என்று பொருள். Android வகை Mobile Phone சிறப்பானது.



Windows Operating System சில Mobile Phone களிலும் வரும் அதேவேளை  Android Operating System சில கணினியிலும் தற்போது வருகின்றது. அதாவது தற்போது வரக்கூடிய இயங்குதள மென்பொருட்கள் (Operating System) Mobile Phone மற்றும் கணினி இரண்டிலுமே செயல்படும் படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சில புதிய வகை Nokia கைபேசிகளில் Windows Operating System வருவதை காணலாம். அதிகமாக கணினியில் Windows OSம் கைபேசியில் Android OSம் பயன்படுகிறது. நீங்கள் Apple iPhone வைத்திருந்தால் அந்த வகை கைபேசியில் இயங்குதளமாக ஆப்பிள் நிறுவனத்தின் IOS என்கின்ற Operating System பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ஆப்பிள் கணினி வைத்திருந்தால் அதில் OS X அல்லது Mac OS என்ற இயங்கு தளம் வருவதை காணலாம்.

தொடரும்...



0 comments:

Post a Comment