August 7, 2017

விண்டோஸ் இயங்கு தளம் - 2

(Windows Operating System - 2)
Windows OS  இதைத்தவிர வேறு பல OS/Operating System களும் இருக்கிறது.

இவற்றில் Windows மற்றும் ஆப்பிள் OS இரண்டும் கட்டணம் செலுத்தி பயன்படுத்த கூடிய Operating System களாகும். நீங்கள் லேப்டாப் வாங்கும் போது Windows உள்ள லேப்டாப் வாங்குகிறீர்கள் என்றால் நீங்கள் Windows  Software க்கும்  சேர்த்து பணம் செலுத்துகிறீர்கள் என்று பொருள்.

ஆனால் Android, Ubuntu, Fedora, Linux mint  போன்ற பல OSகள் இலவசமாகவே கிடைக்கிறது.

இந்த ஒவ்வொரு இயங்கு தளத்திற்குமேன சில சிறப்புகள் உண்டு. சில பார்ப்பதற்கு அழகாக இருக்கும். சிலவற்றில் பயன்பாடுகள் அதிகமாக இருக்கும். சில  பயன்படுத்த எளிமையாக இருக்கும். சிலவற்றில் பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாக இருக்கும்.




உதாரணமாக நாம் பயன்படுத்தும் windows இது பார்க்க மிக அழகு. அதிகமாக பயன்படுத்தப்படுவது. ஆனால் பாதுகாப்பு மிக குறைவு. அதிக பயன்பாடுகளை (Progrmmes) Install செய்தால் கணினி வேகம் குறைந்துவிடும்.  அடிக்கடி தடுமாறக்கூடியது. மேலும் நாள் போகப்போக வேகம் குறைய ஆரம்பித்துவிடும். மிக முக்கியமாக windowsல் வைரஸ்கள் எளிதில் தொற்றிக்கொள்ள வாய்ப்பு உள்ளது. கட்டணமும் செலுத்த வேண்டும்.

Android அழகாகவும் எளிமையாகவும் எல்லா வகையிலும் சிறப்பாகவும் இருக்கும். இது கணினியிலும் செயல்படும். ஆனால் Mobile Phones களுக்கு மிகவும் பொருத்தமானது.

ஆப்பிளின் OS X ஆனது அனைத்து வகையிலும் சிறந்தது. பாதுகாப்பானது, அதிக வசதிகள் கொண்டது. ஆனால் கட்டணம் செலுத்த வேண்டும். ஆப்பிள் நிறுவன கணினியில் மட்டுமே செயல்படும் படி வடிவமைக்கப்படுகிறது.

யூனிக்ஸ் OS பாதுகாப்பானது சிறப்பாக செயல்படக்கூடியது. இலவசமானது. ஆனால் பயன்படுத்த கடினமானது.மேலும் லினக்ஸ் வகையில் பல OS கள் உள்ளன. லினக்ஸ் யாவரும் பயன்படுத்தும் படி கிடைப்பதால் லினஸ்கை பயன்படுத்தி பல OS கள் உருவாக்கப்படுகின்றன. அதில் Android,  Ubuntu, Google Chrome OS, Fedora, Linux mint, போன்றவை முக்கியமானவை. இவை யூனிக்ஸை போலவே பாதுகாப்பானது சிறப்பாக செயல்படக்கூடியது இலவசமானது ஆனால் எளிமையானது. முக்கியமாக வைரசின் தாக்கம் இதில் மிகவும் குறைவு. எனவே இவ்வகை OS கள் இப்போது பெருகி வருகின்றன. இவை பாதுகாப்பு மிக்கது நீடித்து செயல்படுவது ஆதலால் முக்கியமாக இணையதள வழங்கியிலும் அறிவியல் விண்வெளி ஆராய்ச்சி கருவிகளிலும் பாதுகாப்பு கணினிகளிலும் பயன்படுகிறது. தற்போது அனைத்துவகை கருவிகளிலும் லினக்ஸே பயன்படுகிறது.

Windows  Operating System

Windows 1.0
Windows 2.0
Windows 3.0
Windows NT 3.1
Windows for Work groups 3.11
Windows NT Workstation 3.5
Windows NT Workstation 3.51
Windows 95
Windows 98
Windows 98 Second Edition
Windows Me
Windows 2000 Professional
Windows XP
Windows Vista
Windows 7
Windows 8.1
Windows 10

0 comments:

Post a Comment