March 30, 2015

Client server configuration

பாரிய அளவிலான கணனிகளுக்கு பிரதியீடாக தனி நபர் கணனிகளின் வருகையுடன் கணினி சார்பான கணனி வலயமைப்புகள் பிரபல்யம் அடைந்தன.

கணணி வலைபின்னல் முறைகளில் Client server இனை கவனிக்கும்போது அதனை server கணனி மற்றும் Client கணனி என இரு வகைகளாக பிரித்து கொள்ளலாம்.





Client கணனி

கணினி வலை ஒன்றில் அல்லது இணையமூடாக கணினி ஒன்றால் சேவையை பெற்றுக்கொள்ளும் கணனிகள் Client கணனிகள் என அழைக்கப்படும். பொதுவாக இவை வலை பிரயோக மென்பொருட்களை பயன்படுத்தி இயங்கும் தனி நபர் கணனிகளாகும்.

Server கணனி

கணினி வலையமைப்பு ஒன்றில் அல்லது இணையமூடாக கணனிகளுக்கு சேவைகளை வழங்கும் கணனிகள் Severs என அழைக்கப்படும். Customer களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக Severs களின் இயக்க வேகம் Memory Capacity அத்துடன் Storage Capacity என்பன அதிகரித்து காணப்படவேண்டும். வலையமைப்புக்கு சம்பந்தபட்ட வாடிக்கையாளர் கணணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் போது அதற்கேற்ப Severs கணனிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவற்றில் பலவகையான Servers காணபடுகின்றன.

Web server,

Mail server,

Proxy server,

Application server,

Domain name server



1.Web server

Web server ஆனது World wide web இல் HTTP இனை பயன்படுத்தி Client computer க்கு Web page களை வழங்கும் விசேடமான மென்பொருளாகும். இவ் Web server இணை அனைத்து Host computer களும் பயன்படுத்தும். இவற்றிற்கு உதாரணமாக Apache server, Internet information server, Novell server, Lotus server என்பன சிலவற்றை சொல்லலாம்.


2.Mail server

பிராந்திய மற்றும் தொலைவில் உள்ள பயனர்கள் மின் அஞ்சல்களை பெற்று கொள்வதற்கும் அனுப்புவதற்கும் பயன்படும் விசேடமான மென்பொருளாகும்.இவற்றிக்கு உதாரணமாக Microsoft exchange, Qmail, Exim, Sentmail என்பன சிலவற்றை சொல்லலாம்.

Mail server க்கு கிடைக்கும் பயனர்களின் மின் அஞ்சல்கள்ளானது முதலில் Mail storage ஒன்றில் களஞ்சியபடுத்தி வைத்து இரண்டாவதாக பெறுபவருக்கு அனுப்படும். Mail அனுப்பும் போது SMTP ( Simple mail transfer protocol ) எனும் நெறிமுறை தொழில்நுட்பம் பயன்படுத்தபடுகிறது. அதேவேளை Mail இனை பெறும்போது POP3 (Post office protocol version 3) அல்லது IMP (Internet message access protocol) எனும் நெறிமுறை தொழில்நுட்பம் பயன்படுத்தபடுகிறது.


3.Proxy server

Proxy server ஆனது Internet இனை பயன்படுத்தும் Business போன்றவற்றில் பயனர்களுக்கும் Internet க்கும் இடையில் இடைநடுவராக செயல்படும். இது இணையத்தினுடாக நடைபெறும் தகவல் பிரிவாக்கங்களை முறையாக கட்டுப்படுத்துதல், பயனரின் பாதுகாப்பை உறுதிபடுத்தல், மற்றும் Store செய்யும் சேவைகளை பெற்று கொடுத்தல் போன்றவற்றை நடாத்தும். அதேவேளை இது Cache memory இனை அனைத்து பயனர்களுக்கும் வழங்குவதால் மீண்டும் மீண்டும் கோரப்படும் இணையப்பக்கங்களுக்கு விரைவாக குறுகிய நேரத்தில் செல்லலாம்.


4.Application server

Application serverஆனது பிரயோக மென்பொருகளளிற்கு Business logic வழங்குவதற்காக பயன்படுத்தப்படும் Server ஆகும். அத்துடன் Web server உடன் இணைந்து செயற்படும் Application serverஆனது Web application server எனப்படும்.


5.Domain name server

DNS இல் இணைவத்தற்கு பதிவு செய்யப்பட்ட கணனியே Domain name server
எனப்படும். பொதுவான IP Address சிறப்பம்சங்களை கொண்டிருக்கும். அதேவேளை Domain name இனை IP Address களாக மாற்றியமைப்பதும் இதன் பிரதான காரியமாகும்.

0 comments:

Post a Comment