தற்போது சந்தையில் இருக்கும் iPhone, iPad மற்றும் பிற Tabletகளில் நாம் பொதுவாகச் சொல்லும் Internal Memory என்பது RRAM , NAND based RRAM எனும் Flash Memory ஆகும்.
இந்த வகை
Crossbar Chip Design
நினைவகங்களில் சில GBக்கள் அளவு தான் சேமிக்க முடியும். இந்த வகை நினைவகங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு $60 பில்லியன் டாலர்.
தற்போது Internal Memoryயில் ஒரு TB (1 Terra Byte = 1024 GB) வரை சேமிக்க இயலும் வகையில் Crossbar எனும் புதிய வகை நினைவகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Crossbar இன் சிறப்பம்சங்கள்:
இதன் பரும அளவு மற்ற நினைவகங்களை விட சிறியது. இது பயன்படுத்தும் மின் அளவு 20 மடங்கு குறைவு இதன் நினைவாகக் கொள்ளளவு 200 மடங்கு அதிகமாக இருக்கும். ஒரு வினாடிக்கு 140GB data வை இந்த Crossbar சிப்பில் எழுத முடியும். (Flash Memoryயில் ஒரு வினாடிக்கு 7GB) உருவாக்கியவர்: Wei Lu , இவர் அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர். Google Glass போன்ற புதிய வகை சாதனங்களிலும் இந்த நினைவகம் பயன்படுத்தப்படுவதன் மூலம் இன்னும் பல வகை வசதிகளை பயணர்களுக்குக் கொடுக்க முடியும்.
Crossbar இதுவரை 100 காப்புரிமைகளுக்கு பதிவு செய்துள்ளது. அதில் 30 காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இருபது ஊழியர்கள் இருக்கும் Crossbar நிறுவனம் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளது. Kleiner Perkins Caufield & Byers, Artiman Ventures, and Northern Light Venture Capital முதலீடு நிறுவனங்கள் சேர்ந்து $25 மில்லியன் முதலீடு செய்துள்ளன.
Crossbar Chip Structure
பொதுவாக இது போன்ற புதிய தொழில்நுட்பங்கள் சந்தைக்கு வர பல வருடங்கள் ஆகும். ஆனால் இந்த Crossbar நினைவfங்களை மூன்று வருடத்திலேயே உற்பத்தி செய்ய முடிந்துள்ளது என Crossbar நிறுவனத்தின் CEO George Minassian தெரிவித்துள்ளார்.
Source : www.techtamil.com
0 comments:
Post a Comment