September 24, 2013

உங்களுக்கு மட்டுமா இதயம்...! தக்காளிப் பழத்திற்கும் உண்டு...!


நீங்கள் விரும்பிய வடிவங்களில் (இதயம், நட்சத்திரம்.) மரக்கறிகள்,  பழங்களை உற்பத்தி செய்து வைபவங்களில் உணவு பரிமாறலின் போது ஆனந்தமடையுங்கள். 


அது எப்படி…?
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்…

விருப்பமான நவீன வடிவமைப்புகளை கொண்ட பிளாஸ்ரிக் அச்சுக்கள் இதற்காக விற்பனைக்குண்டு அவற்றை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி பயன் பெறலாம். விவசாயிகளுக்கு இது ஒரு அரிய சந்தர்ப்பம்.

சிறிதளவு வளர்ச்சியடைந்த பழங்கள், மரக்கறி வகைகளை அச்சுக்களுக்குள் படத்தில் காட்டியவாறு முழுமையாக உட்புகுத்தி நூலினால் கட்டிவிடவும் பின்னர் சில நாட்கள் அவற்றை வளர விடுவதன் மூலம் அந்தந்த அச்சுக்களின் வடிவங்கள் உருவாகியிருப்பதை காணலாம். அறுவடை செய்யும் வேளை அச்சுக்களை கழற்றியதும் உங்களின் விரும்பிய வடிவங்களை கொண்ட பழங்கள், மரக்கறிவகைகள் உருவாகியிருப்பதைக் காணலாம். அவற்றின் குறுகிய மற்றும் நீண்ட கால வளர்ச்சிகளுக்கு ஏற்றவாறு அறுவடை செய்யலாம்.
தக்காளி, தோடை, தேசி, மண்டரின், வெள்ளரி, கத்தரி மற்றும் நீங்கள் விரும்பிய பல வகையான பழங்கள், மரக்கறிவகைகளை நீங்கள் விரும்பிய வடிவத்தில் உற்பத்தி செய்து வைபவங்களில் பரிமாறி சிறந்த உணவுக் கலை நிபுணராவதுடன் குழந்தைகளையும் மகிழ்ச்சியுறச் செய்யுங்கள்.
  


0 comments:

Post a Comment