கணினியில் தவறுகள் (errors) ஏற்படும் போது சில மென்பொருட்களையும், சில Device Driver களையும் நிறுத்தி வைத்து கணினியை Restart செய்து தவறுகளைக் கண்டறியவும், சரி செய்யவும் சிறந்த முறை safe boot ஆகும். இது தவிர safe mode இல் இருந்து சிறிது வேறுபட்டு clean boot தொடக்கப்படுகிறது.
கணினி சாதாரண நிலையில் non-Microsoft background applications and services என்பவை இல்லாது தொடங்கப்படும்.
அதாவது boot செய்யப்படும் போது Microsoft services ஐ மட்டும் வைத்து கணினி தொடங்கப்படும்.Clean Boot, XP கணினிகளில் சிறிது சிரமமாகும்.
Start -> Run சென்று msconfig.exe என Type செய்யவும். வரும் கட்டத்தில் “General – Selective startup” என்பதை தெரிவு செய்யவும்.அதில் வரும் Load startup items என்பதை uncheck செய்யவும். (இப்போது அங்கே Load System Services என்பது மட்டும் ஆக்டிவ் ஆகி இருக்கும்) அதன்பின் services என்பதில் சென்று Hide all Microsoft services என்பதை check செய்து, வலது பக்கத்தில் உள்ள Disable all என்பதைக் கிளிக் செய்து OK கொடுக்கவும். இதை முடித்தவுடன் கணினியை Restart செய்யவும்.
இப்படி செய்வதால் இணையம் உட்பட பல வேலை செய்யாது. பிரச்சனைகளை பொறுத்து சில மணி நேரம் தொடர்ந்து கணினியை அப்படியே வைத்திருந்து சில ப்ரொகிராம்களைத் திறந்து வேலை செய்து பார்க்கவும். சரியாக இருந்தால், முன்னர் சொன்ன Msconfig இல் startup என்பதில் சென்று, சிலவற்றை ஆக்டிவ் செய்து Restart செய்து பார்க்கவும். இப்படி செய்வதன் மூலம் எதை ஆக்டிவ் செய்யும் போது, கணினியில் தவறு ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து சரி செய்யலாம்.
இந்த நிலையில் windows Installer வேலை செய்யவில்லை என error செய்தி வந்தால் Start -Computer இல் வலது கிளிக் செய்து manage -> Services and Applications –> Services -> Windows Installer என்பதை Start செய்து கொள்ளலாம். சரி செய்த பின் மீண்டும் msconfig சென்று Selective startup என்பதை நீக்கி மீண்டும் normal startup ஐ ஆக்டிவ் செய்து கொள்ளலாம்.
கணினியில் தவறுகளை முதலில் கண்டறிந்து, safe mode, clean boot செல்வது சிறந்ததாகும். முக்கியமாக தவறுகளின் பட்டியலை event viewer இலும், Minidump files களிலும் கண்டறியலாம். Minidump files என்றால், கணினியில் ஏற்படும் தவறுகளை, error-crash, blue screen of death, BSOD போன்றவற்றை சிறிய தகவல்களாக தரும் கோப்பாகும். இந்த minidump files களை BlueScreen View, ஸ்கேன் செய்து ஒரு தகவல் பட்டையாக தருகின்றது.
கணினி/மடிகணினி அதிகம் சூடாவதால் இம்மாதிரி ஆனால் பிரச்சினைகளை தவிர்க்க கணினியில் உள்ள CPU, GPU (CPU ~60-65C ;GPU ~ 65C ) வின் வெப்ப நிலையையும் நாம் கவனத்தில் கொண்டு heatsink, cooling fan களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
0 comments:
Post a Comment