Bringing you the latest information in the field of Technology and Research

විද්‍යා,තාක්ෂණ හා පර්යේෂණ අමාත්‍යාංශයෙන් ජාතියේ දරුවන්ට පිදෙන තිළිණයකි | நாட்டு குழந்தைகளுக்கான விஞ்ஞான தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சின் வெகுமதி

Authored by National Vidatha Network Writers

විද්‍යා,තාක්ෂණ හා පර්යේෂණ අමාත්‍යාංශයෙන් ජාතියේ දරුවන්ට පිදෙන තිළිණයකි | நாட்டு குழந்தைகளுக்கான விஞ்ஞான தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சின் வெகுமதி

Adapted from renowned international sources

විද්‍යා,තාක්ෂණ හා පර්යේෂණ අමාත්‍යාංශයෙන් ජාතියේ දරුවන්ට පිදෙන තිළිණයකි | நாட்டு குழந்தைகளுக்கான விஞ்ஞான தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சின் வெகுமதி

Educational blog for future generation of the nation

විද්‍යා,තාක්ෂණ හා පර්යේෂණ අමාත්‍යාංශයෙන් ජාතියේ දරුවන්ට පිදෙන තිළිණයකි | நாட்டு குழந்தைகளுக்கான விஞ்ஞான தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சின் வெகுமதி

Project of the Ministry of Science,Technology and Research, Sri Lanka

විද්‍යා,තාක්ෂණ හා පර්යේෂණ අමාත්‍යාංශයෙන් ජාතියේ දරුවන්ට පිදෙන තිළිණයකි | நாட்டு குழந்தைகளுக்கான விஞ்ஞான தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சின் வெகுமதி

April 30, 2019

தேனீக்கள் இல்லாவிட்டால் மனித இனம் அழிந்து போகுமா?

தேனீ க்கான பட முடிவு
 சில இடங்களிலும் பழங்குடி மக்கள் தங்கள் நிலங்களை காக்க கடும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். காரணம் அந்த காடுகள் அவர்களின் வாழ்விடங்கள்.
அங்கு இருக்கும் மூலிகைகளும், மரங்களும்,தேனும் அவர்களின் வயிறுகளுக்கு உணவிடுகின்றன.நகரத்தில் தேனீக்கள் கூடுகட்ட போவதில்லை.தேனீக்கள் நகரத்தின் பரபரப்பில் இருப்பது இல்லை.
காடுகளின் அமைதியான சூழலில் இருந்து தான் பல அரிய பொருட்கள் மனிதனுக்கு கிடைக்கின்றன.மனிதனின் உடல் நலனை காக்கும் பல பொருட்கள் காடுகளிலிருந்து கிடைக்கின்றன. அவற்றில் தேன் அதிசயமான ஒரு அமிர்தம்.
தேன் எடுத்து வந்து நாம் உண்டு விடுகிறோம். தேனீக்களின் உணவான அவை தேனீக்கு கிடைக்காமல் போகிறது. ஆனால் தேனீக்கள் அவற்றை பற்றி கவலைப்படுவதில்லை. அடுத்த இடத்தில் கூடுகட்ட போய்விடுகின்றன. தேனீக்கள் பார்க்க உருவத்தில் சிறிது தான். ஆனால் அவற்றின் வாழ்க்கை முறையும், அவை மனிதனுக்கு கற்றுத்தரும் பாடமும் ஏராளம். ஆனால் நாம் தான் அதை கடைப்பிடிப்பதில்லை. அவற்றை காக்கவும் முன்வருவதில்லை. சமீபத்தில் தமிழ்நாட்டின் ஒரு விமான நிலைய உயர் அதிகாரியுடன் பேசிக்கொண்டிருந்தேன்.அப்போது அவர் வீட்டில் சில தேன்கூடுகளை வைத்து தேனீக்களை வளர்ப்பதை பற்றி சொன்னார். பிரமித்து போனேன். எப்போதும் பிசியாக இருக்கும் இவரா தேனீக்களை வளர்க்கிறார் என்ற ஆச்சரியமாக இருந்தது.
அவர் தேனீக்களை பற்றி சொன்னது மிகவும் ஆச்சரியப்படத்தக்க தகவலாக இருந்தது. இதோ….
பெண்ணின் ஆட்சி
” தொடக்க காலத்தில் மனித வாழ்க்கையில் பெண்களுக்கு தான் முக்கிய இடம் இருந்தது. அதாவது தாய்வழிச்சமுதாயம் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அது தான். பெண்கள் தான் ஆங்காங்கே இருந்த மனித குழுக்களின் தலைவியாக இருந்திருக்கிறாள். விவசாயம் உள்ளிட்டவைகளில் அவர்கள் தான் ஈடுபட்டு அந்த குழுக்களுக்கு உழைப்பதற்கான வழியை காட்டியிருக்கிறார்கள். காலப்போக்கில் பெண்ணடிமை சமுதாயம் உருவாயிருக்கிறது. ஆனால் தேனீக்கள் குழுவில் அன்றிலிருந்து இன்று வரை பெண்களின் ஆட்சி தான்.
தேனீக்களில் குடும்பத்தில்(காலனி) ராணி தேனீ, ஆண்தேனீ,வேலைக்கார தேனீ என்ற மூன்று வகையான தேனீக்கள் இருப்பதுண்டு. இதில் வேலைக்கார தேனீக்கள் பூக்களுக்கு சென்று தேனை எடுத்து வந்து கூட்டில் சேர்க்கும். ராணி தேனீ முட்டையிட்டு தேனீக்களை உற்பத்தி செய்து கொண்டே இருக்கும். ஆண்தேனீ வழக்கமான சோம்பேறி என்று வைத்துக் கொள்ளலாம்.
தேனில் பலவகை இருக்கின்றன. ஒவ்வொன்றும் குணத்தில் மாறுபட்டவை.மாமரம், வேப்பமரம் போன்ற மரங்களின் உச்சாணிக் கொம்பில் கூடுகட்டி இந்த மரங்களின் பூக்களில் தேன் எடுக்கும் தேனீக்களின் தேனுக்கு கொம்புத் தேன், மலை உச்சியில் யாரும் தொட முடியாத தூரத்தில் இருந்து கொண்டு பலவகையான காட்டு மரங்களில் எடுக்கும் தேனுக்கு மலைத்தேன் என்று பெயர். இப்படி இருக்கும் இடத்திற்கு ஏற்றபடி தேன் பல பெயர்களை கொண்டிருக்கிறது.இது ஒரு புறமிருக்கட்டும்.
இந்த தேனீக்கள் பூக்களுக்கு பூக்கள் சென்று தேனை எடுக்கும் போது தான் மனித குலம் வாழ தேவையான காய்கனிகள் உற்பத்திக்கான செயல்பாடு தொடங்குகிறது. இந்த தேனீக்கள் பூக்களில் அமரும் போது அந்த பூக்களில் இருக்கும் மகரந்தங்கள் அவற்றின் கால்களில் ஒட்டிக் கொள்கின்றன. ஆண்மகரந்தங்கள் இப்படி தேனீக்களின் கால்களில் அமர்ந்து பயணம் செய்து மற்றொரு பூவின் பெண் சூலகத்தில் போய் அமரும் போது பூக்களின் கருவுறுதல் நடைபெறுகிறது. பூக்கள் காய்களாக மாறி கனிகளாக மாறுகின்றன. ஆக…மனிதனுக்கு வேண்டிய காய்கறிகள் உற்பத்தியாவதற்கு தேனீக்கள் மறைமுகமாக உதவி செய்கின்றன. இதை தாவரவியலாளர்கள் அயல் மகரந்த சேர்க்கை என்கிறார்கள். அதாவது நமது உறவு முறையை விட்டு விட்டு தூரத்து உறவு முறையில் காதல் திருமணம் செய்து போல, எங்கோ பல மைல் தொலைவில் இருக்கும் இரண்டு செடிகளின் பூக்களை தனது கால் என்னும் காதலால் இணைக்கின்றன இந்த தேனீக்கள்.அதாவது
நாள் தோறும் கோடிக்கணக்கான மலர்களை சென்று அமர்ந்து தேனை எடுக்கும் தேனீக்கள் பூக்களை கருவுர செய்ய உதவும் தூதுவனாக இருக்கின்றன. ஆக…தேனீக்களால் நாள் தோறும் பல கோடி மலர்கள் பூவிலிருந்து காயாக மாறும் நிகழ்வுக்கு போகின்றன.
தேனீக்கள் இல்லாமல் போனால்…
ஆக…இதிலிருந்து தெரிய வருவது, தேனீக்களின் எண்ணிக்கை குறைந்து போனால் அயல் மகரந்த சேர்க்கையும் குறைந்து போகும். பிறகு மனிதனுக்கு தேவையான காய்கறிகள்,பழங்கள் எங்கிருந்து கிடைக்கும்?
ஒரு  புறம் மக்கள் தொகை கடுமையாக பெருகி வரும் நிலையில் உணவு உற்பத்தி குறைந்து போனால்….என்ன ஆகும்?
மனித இனமும் அழிய தொடங்கும்.சத்துஇல்லாத உணவுகளால் உடல் நலம் பாதிக்கும்.எளிதாக தொற்று நோய்கள் மனிதனை தாக்கும்.
பிறகு மானிட குலத்தின் கதி?
இந்த கேள்விக்கு பல வெளிநாட்டு விஞ்ஞானிகளும் கண்டுபிடித்த ஒரே விடை …எக்காரணம் கொண்டும் தேனீக்களை அழிந்து போக விடக்கூடாது என்பது தான். ஆக இப்போது வெளிநாடுகளில் பல தனிநபர்கள் கூட தேனீக்களை வீடுகளில் வளர்ப்பதை ஒரு சமூக சேவையாக நினைக்க தொடங்கியிருக்கிறார்கள். சிறிய தேன் கூடுகளை வைத்து தேனீக்களை உற்பத்தி செய்கிறார்கள்.

தேனை தனியாக சாப்பிட்டால் பலன்
  • தேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்சல், இருதயத்தில் ஏற்படும் வலி,பலவீனம் ஆகியவற்றை போக்கும்.
  • குடலில் ஏற்படும் புண்களை(அல்சர்) ஆற்றும். கல்லீரலில் ஏற்படும் நோய்களை போக்கும்.
  • தேனைக்குறைந்த அளவு அருந்தினால் மலச்சிக்கலை போக்கும். அதிக அளவு அருந்தினால் மலச்சிக்கலை உண்டு பண்ணும்.
  • பேதியை நிறுத்தும்.ரத்தசோகையை போக்கும்(இந்திய பெண்கள் 50 சதவீதத்திற்கும் மேலானவர்கள் இந்த ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்),நரம்புகளுக்கு வலிமையை தரும். நீர்க்கோவையை சரி செய்யும். சிறுநீர்க்கழிவை குறைக்கும்.
  • தோல் சம்பந்தமான நோய்கயை போக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும். கிருமி,நாசினியாக வேலை செய்யும்.பற்கள்,கண்கள் ஆகியவற்றுக்கு பலம் தரும். தொண்டையில் ஏற்படும் தொற்றுநோய்,வலியை குறைக்கும்.
  • உடல்குண்டானவர்களை மெலிய செய்யும்.உடலுக்கு ஊட்டச்சத்து தரும்.சுவாச காச நோய்களை குணமாக்கும். விக்கல் நோயை போக்கும்.
  • உடலில் விஷம் இருந்தால் முறிக்கும். சூலரோகங்களை போக்கும்.உடலையும் உள்ளத்தையும் சுறுசுறுப்பாக இயங்க செய்யும். நீண்ட ஆயுளை தரும். பெண்களின் கருப்பையில் இருக்கும் நோய்களை குணப்படுத்தும். குழந்தைகளை ஊட்டத்துடன் வளர்க்க பயன்படும்.
சரி..தேனை குளிர்ந்த நீருடன் கலந்து பருகினால் அதன் நோய்தீர்க்கும் குணம் மாறும்.அதை பார்க்கலாம்.
  • தேனுடன் குளிர்ந்த நீரை கலந்து அருந்தினால்(மண்பாணை தண்ணீர் சிறப்பு) அருந்தினால் உடலின் ஊளைச்சதை குறையும்.களைப்பு உடனே நீங்கும்.
  • தேனுடன் காய்ச்சிய பசும்பாலை கலந்து அருந்தினால் உடல் வலிமை அடையும்.தாதுவிருத்தி ஏற்படும்.
  • ஆட்டின் பாலை வடிகட்டி தேனுடன் அருந்தினால் உடலுக்கு தேவையான ரத்தத்தை ஊறச்செய்யும்.
  • ரோஜா இதழ்கள் கல்கண்டு,தேன் ஆகியவற்றை கலந்து தயாரிக்கும் குல்கந்தை சாப்பிட்டால் உடலின் சூடுதணிந்து உடல் குளிர்ச்சியடையும்.
  • 100 மிலி பசுவின் பாலையும், 100 மிலி தண்ணீரையும் கலந்து இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் உடலில் மறைந்திருக்கும் நோய்க்காரணங்கள் மறைந்து போகும்.
  • காய்ந்த திராட்சை பழங்களை தேனில் ஊறவைக்க வேண்டும். ஊறியவுடன் காலை மாலை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டால் உடல் அழகு பெறும்.
  • ஒரு கோழி முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் ஒரு தேக்கரண்டி தேன்கலந்து அருந்தி விட்டு உடற்பயிற்சி செய்து வந்தால் உடல் களைப்பு அடையாது. வலிமை அதிகரிக்கும்.
  • அருகம்புல்லை தட்டி கசாயம் எடுத்து தேனைக்கலந்து அருந்தினால் பல நோய்களை குணமாக்கும். களைப்பு என்பதே இருக்காது.
  • கணைச்சூட்டினால் குழந்தைகள் மெலிந்து காணப்படுவார்கள். குழந்தையின் பெற்றோருக்கு பல டாக்டர்களிடம் காட்டியும் ‘ என்ன சாப்பிட்டாலும் குழந்தை தேறமாட்டேன்கிறதே..’ என்பார்கள். இந்த குழந்தைகளுக்கு தினசரி ஆட்டுப்பாலில் இரண்டு சொட்டு தேனை கலந்து கொடுத்தால் கணைச்சூடு நீங்கி குழந்தை அழகு போட்டியில் இடம் பெறும் அளவு குண்டாகிவிடும்.
  • இளநீரில் தேன் கலந்து அருந்தினால் உடல் சூடு சட்டென்று தணிந்து போகும்.
  • அத்திப்பழங்களை 48 நாட்களுக்கு தேனில் ஊறவைத்து(இது சர்வோதாய சங்கங்களில் கிடைக்கும்) தினசரி ஒன்றிரண்டு சாப்பிட்டால் உடல் வலிவு பெறும்.
  • மஞ்சள் காமாலை உள்பட காமாலைநோய் கண்டவர்கள் தினமும் தேன் சாப்பிட்டால் காமலை குறைவதுடன் பின்விளைவுகளும் இருக்காது.
  • இஞ்சியை இடித்து சாறு எடுத்து சிறிது நேரம் வைத்திருந்து அது நன்றாக தெளியும். இந்த தெளிந்த சாறில் தேன் கலந்து அருந்தி வந்தால் வயிற்று செரிமானம் சரியாகும். உண்ட உணவு உடனே செரித்து விடும். எங்காவது ருசியாக இருக்கிறதே என்று கண்டதையும் சாப்பிடுபவர்கள் உடனே இதை செய்தால் சீரணம் உடனே உறுதி.
பெண்களின் முக அழகுக்கு தேன்
வெள்ளைக் கோதுமை மாவு ஒரு கரண்டி அதனுடன் தேன் கலந்து சில துளிகள் பன்னீரையும் விட்டு நன்றாக பிசைந்து, பின்பு இன்னும் பன்னீர் விட்டு கொஞ்சம் பிசைந்து முகத்தில் சிறிது நேரம் பூசி வைத்திருக்கவும். அரை மணி நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி முகத்தை பருத்தி துணியால் ஒற்றி எடுக்க வேண்டும். வாரத்திற்கு மூன்று முறை எளிதான இந்த முறையை செய்து வர உங்களின் முகம் “கார்னியர் நேச்சுரல்,பேர் அன்ட் லவ்லி,வீகோடர்மரிக்’ எல்லாவற்றையும் தோற்கடிப்பது உறுதி. பிறகு உங்கள் முகம் ‘விண்ணாடிக்கீழ்க்கடலில் விரிந்து வரும் பரிதியிலே கண்ணாடி ஏரியென கதிர்சாய்க்கும் வட்டமுகம்’ஆக மாறி விடும்.பிறகென்ன….எல்லாம் நலமே!

செயற்கை நுண்ணறிவுத்திறனும், தமிழ் கற்றல்,கற்பித்தல் நுட்பங்களும்





மனிதர்களின் அறிவை இயற்கையான அறிவு, செயற்கையான அறிவு என வகைப்படுத்த இயலும். குலவித்தை கற்றுப் பாதி, கல்லாமற் பாதி என்ற பழமொழி கூட இக்கருத்தையே எடுத்துரைக்கிறது. இதையே வழக்கில் தன்னறிவு, சொல்லறிவு எனவும் கூறுவதுண்டு. மனிதர்களுக்கு எப்படி கல்வி என்ற முறை செயற்கையாக தம் அறிவை வளர்த்துக்கொள்ள உதவுகிறதோ அதுபோல,  கணினி  அல்லது இயந்திரங்கள்  ஆகியவற்றை வைத்துக்கொண்டு அவற்றுக்குக் கற்பித்தல் வழியாக நுண்ணறிவை உருவாக்குகின்ற முறையே செயற்கை நுண்ணறிவுத்திறன் (Artificial Intelligence) என்று அழைக்கப்படுகிறது. மனிதர்களுக்கு ஒத்த அல்லது மனிதர்களைவிடஅறிவுத்திறன் கொண்ட கணிப்பொறிகளை உருவாக்குவதே இத்துறையின் நோக்கம்.வளர்ந்துவரும் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தின் வழி தமிழ்மொழியைக் கற்றல், கற்பித்தல் குறித்த ஆய்வாக இக்கட்டுரை அமைகிறது.
ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கம்
           ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் 2020-ம் ஆண்டு 50 லட்சம் வேலை இழப்புகள் ஏற்படலாம் என கடந்த ஆண்டு ஆய்வுகளும் வெளிவந்தன. 2030-ம் ஆண்டில் சர்வதேச பொருளாதாரத்தில் ஏஐ நுட்பத்தின் பங்கு 15.7 டிரில்லியன் டாலராக இருக்கும் என்று பிடபிள்யூசி நிறுவனம் தனது ஆய்வில் சுட்டிக் காட்டியுள்ளது. மேலும் 6.6 டிரில்லியன் டாலர் மதிப்புக்கு உற்பத்தி அதிகரிக்கும் என்றும் ஏஐ தொடர்பான வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட், கூகுள், ஐபிஎம், ஃபேஸ்புக், ஜெனரல் எலெக்ட்ரிக், அமேசான், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் தற்போது இந்த தொழில்நுட்பம் குறித்த ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன. இந்த ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கம் எல்லாத்துறைகளிலும் இருக்கும் என்பதால் இத்தொழில்நுட்பமானது தமிழ் மொழியில் எந்த அளவு பயன்படுகிறது, என்பதை அறிந்து எதிர்காலத்தில் இத்தொழில்நுட்பத்துக்கு ஏற்ப நாம் நம் தமிழ் மொழியின் நுட்பங்களை வளர்த்துக்கொள்வது நம் கடமையாகவுள்ளது.
கணினிக்கு தமிழ் கற்பித்தல்
      இயங்குதளம் முதல் இணையம் வரை வன்பொருள், மென்பொருள் என பல்வேறு நிலைகளில் தமிழ் எழுத்துருச் சிக்கல் பெரிதாக இருந்தது. ஒருங்குறி அதற்கு நல்ல தீர்வாக அமைந்தது. இன்று, சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, இலக்கண பிழை திருத்தி, வட்டார வழக்கு பயிற்றுவித்தல், எந்திர மொழிபெயர்ப்பு நுட்பங்கள்,  எழுத்துக்களைப் பேச்சாகவும், பேச்சை எழுத்தாகவும் மாற்றுதல், ஒளி எழுத்துணரி (OCR), இயற்கை மொழி ஆய்வு (Natural Language Processing) செயற்கை நியுரல் கட்டமைப்புகள், (Artificial Neural networks) ஆழக் கற்றல்     (Deep Learning) வரை பல்வேறு நுட்பங்கள் கணினிக்குக் கற்பிக்கப்பட்டு வருகின்றன. வளர்ந்துவரும் ஒவ்வொரு நுட்பங்களுக்கும் ஏற்ப தமிழ் மொழியை நாம் தகவமைத்துக்கொள்ளவேண்டும். அதற்கான கலைச்சொல் வளங்களை உருவாக்கவேண்டும். தமிழ் வழி நிரலாக்கம் சராசரி மக்களின் பயன்பாட்டுக்கும் வரவேண்டும்.
கணினி வழி தமிழ் கற்றலும், கற்பித்தலும்
      குழந்தைகளுக்கான அடிப்படைத்தமிழ் தொடங்கி தமிழாய்வு வரை கணினி வழி தமிழ் கற்பதற்கான வழிமுறைகளையும், எழுத்து, ஒலி, ஒளி என பல்வேறு வடிவங்களில் கணினி, இணையம், மென்பொருள், குறுஞ்செயலிகள் போன்றவற்றில் தமிழ் கற்பதற்கான சூழல்களை உருவாக்கவேண்டும். மேலும் கணினியில் நழுவம் தொடங்கி தோற்றமெய்மை (Virtual reality) வரை தமிழ் கற்பித்தலுக்கான வாய்ப்புகள் உள்ளன. வலைப்பதிவு, சமூகத்தளங்கள் என காலத்துக்கு ஏற்ப வகுப்பறைகளைக் கடந்து மாணவர்களுடன் ஆசிரியர்கள் தொடர்பில் இருக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் தமிழ் கற்றல் கற்பித்தலுக்குக் கணினியை சரியாகப் பயன்படுத்தினால்  உலகுபரவி வாழும் தமிழர்களும் அடுத்த தலைமுறையினருக்குக்கும் தமிழைக் கொண்டு சேர்க்கமுடியும்.
தமிழ் கற்றல், கற்பித்தலில் மனிதனும் ஏஐ நுட்பமும்
     தமிழ் கற்றல் என்பது குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை நடைபெற்றாலும், உள்நாடு, வெளிநாடு எனவும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், பிறமொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்ற நிலையிலும் தமிழ் பேச மட்டுமே தெரிந்தவர்கள், எழுத்து வடிவத்தை அறியாதவர்கள் எனவும் தமிழ் கற்போர் பல வகையில் உள்ளனர். இந்நிலையில் தமிழ் கற்றல், கற்பித்தல் என்பது கணினி மனிதனிடம், மனிதன் கணினியிடம்  என இரு நிலைகளில் நிகழ்கிறது. அறிவு, அனுபவ அறிவு, பொது அறிவு, நினைவுத்திறன், செயல்திறன், உணர்வுகளைக் கையாளும் திறன் என பல்வேறு செயல்பாடுகள் மனிதனை அடிப்படையாகக் கொண்டு கணினிக்குக் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
ஐ.கியு + இ.கியு = ஏ.ஐ (IQ + EQ = AI)
            Intelligence quotient என்ற சொல்லை நுண்ணறிவு என்றும், சுருக்கமாக அதை IQ என்றும் அழைக்கிறோம். அதுபோல Emotional Intelligence என்ற சொல் உணர்வுகளை கையாளும் அறிவைக் குறிப்பதாக அமைகிறது. அதைச் சுருக்கமாக  EQ என அழைக்கிறோம். Artificial Intelligence என்ற சொல்லை,  செயற்கை நுண்ணறிவு என்றும் AI என்றும் அழைக்கிறோம். இன்று மனிதர்களின் நுண்ணறிவுத்திறனை அறிந்துகொள்ளப் பல இணையதளங்கள் உள்ளன. மனித உணர்ச்சிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள உளவியல் அடிப்படையில் பல புரிதல்கள் ஏற்பட்டுள்ளன. மனிதர்களின் இயற்கையான அறிவைக்கடந்து திறன்பேசி போன்ற பல நுட்பியல் கருவிகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. இந்நிலையில் தேடுபொறி முதல் சமூகத்தளங்கள் வரை இணையத்திலும் சராசரி மக்களின் பயன்பாட்டிலுள்ள நுட்பியல் கருவிகளிலும் மனித நுண்ணறிவை அளவிடும் முறைகளும், உணர்வுகளை கையாளும் நுட்பங்களும் மேம்படுத்தப்படவேண்டிய நிலையிலேயே இருக்கின்றன. திறன்பேசி முதல் பல்வேறு நுட்பியல் கருவிகளிலும் இதனைக் கருத்தில்கொள்ளவேண்டும்.
மனிதன் -  ஏ.ஐ நுட்பம்
      கணினியும், இணையமும், மென்பொருள்களும், குறுஞ்செயலிகளும் மனிதனோடு கற்றல், கற்பித்தல் என்ற நிலைக்கு வந்துவிட்டன. இந்நிலையில் யுடியுப், கான் அகாடமி போன்ற காணொளி வழி கற்பித்தல், ஸ்மார்ட் கிளாஸ், வர்சுவல் கிளாஸ் என்றழைக்கப்படும் வகுப்பறைச் சூழல்கள் எல்லாம் நடைமுறைக்கு வந்துவிட்டன. சராசரி ஆசிரியரின் மொழியறிவு, பொது அறிவு, பொதுவான அறிவு, நினைவுத்திறன், கற்பனை வளம், ஒப்பீட்டு அறிவு, உவமை  ஆகியன ஏ.ஐ நுட்பியல் கருவிகளுக்குப் போதுமானதாகக் கற்பிக்கப்படவில்லை. கணினி வழி தமிழ் கற்பித்தலுக்கான வாய்ப்புகள் நிறைய உருவாக்கப்பட்டிருந்தாலும், கணினி, மனிதனிடம் கற்கவேண்டிய பண்புகள் நிறையவே உள்ளன.  
நிறைவாக..
·         மனிதர்களை ஒத்த அல்லது மனிதர்களைவிட அறிவுத்திறன் கொண்ட கணினிகளை உருவாக்கும் நோக்குடன் வளர்ந்துவரும் துறையே ஏஐ என்றழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவுத்திறன் என்ற துறையாகும்.
·         ஏஐ நுட்பத்தால் இன்றைய சூழலில் கணினி முதல் கணினி சார்ந்த பல்வேறு நுட்பியல் கருவிகளும் திறன்மிக்கனவாகவும் அவரவர் மொழியிலும் பயன்படுத்த இயலும் என்ற சிறந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதனால் இந்நுட்பத்தால் தமிழ் கற்றல் கற்பித்தலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படவுள்ளது.
·         இயங்குதளம் முதல் இணையம் வரை வன்பொருள், மென்பொருள் சமகால பயன்பாடுகளில் ஏஐ என்ற நுட்பம் பெரும்பங்கு வகிக்கிறது. அதனால் கணினிக்கு தமிழ் கற்பித்தல் வழியாக தமிழ் மொழியின் பெருமையை மேலும் உலகறியச் செய்ய இயலும்.
·         சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, இலக்கண பிழை திருத்தி, வட்டார வழக்கு பயிற்றுவித்தல், எந்திர மொழிபெயர்ப்பு நுட்பங்கள்,  எழுத்துக்களைப் பேச்சாகவும், பேச்சை எழுத்தாகவும் மாற்றுதல், ஒளி எழுத்துணரி (OCR), இயற்கை மொழி ஆய்வு (Natural Language Processing) செயற்கை நியுரல் கட்டமைப்புகள், (Artificial Neural networks) ஆழக் கற்றல்     (Deep Learning) என பல்வேறு முறைகளில் கணினிக்கு தமிழ் கற்பிக்கப்பட்டு வருகிறது.
·         மேலும் கணினி வழியாகத் தமிழ் கற்றல், கற்பித்தலுக்கான சிறப்பான களங்கள் உருவாகியுள்ளன. ஐ.கியு, இ.கியு, ஏ.ஐ, என்னும் அறிவு குறித்த தெளிவான புரிதல், செயற்கை நுண்ணறிவுத்திறன் வழி தமிழ் கற்றல் கற்பித்தல் குறித்த ஆய்வில் எதிர்காலத்தில் மிகச்சிறப்பான வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும்.
·         கணினிக்குத் தேவையான தமிழ் மொழி அறிவை முறையாகக் கற்பித்தால் எதிர்காலத்தில் கணினிகளை மனிதனுக்கு மாற்றாக மட்டுமின்றி மனிதனுக்குப் போட்டியாகவும் உருவாக்கமுடியும்.

·         ஒருகாலத்தில் அஷ்டாவதானி, தசாவதானி, சதாவதானி என்று மனிதர்களின் திறமைகளைப் போற்றினோம். இன்று மனிதனுக்குப் போட்டியாக கணினிகள் பல்வேறு திறன்களுடன் வளர்ந்துவருகின்றன. இச்சூழலில், கணினிக்கு தமிழ் சார்ந்த பொது அறிவைக் கற்பிப்பது மிக எளிதாக உள்ளது. ஆனால் பொதுவான அறிவு அதாவது அதைக் கேட்பரின் திறனறிந்து எவ்வாறு சொல்வது என்ற அறிவைக் கணினிக்குக் கற்பிப்பது நம்முன் உள்ள மிகப்பெரிய இலக்காகவே உள்ளது.

மரம் வளர்ப்போம்!! புவியை காப்போம்!!





கோடை காலம் என்பதால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளதுகாலம் செல்லசெல்ல வெப்பம் அதிகரிக்கிறதே இன்றி குறைந்தபாடில்லை.இதற்கு முக்கிய காரணம்புவி வெப்பமாதல் தான்புவி வெப்பமடைய காரணங்கள் பலஅவற்றுள் முக்கியமானகாரணம் மரங்களை வெட்டுவதுதான்.

மரம் என்றாலே நன்மை தான்
      மரங்களும் குழந்தைகளைப் போலத் தான் விதை மண்ணில் விழுந்து சிறுசெடியாய் முளைத்து அது மெல்ல மெல்ல வளர்ந்து மரமாகிறதுஒரு செடி மரமாக வளரகுறைந்தது 2 ஆண்டுகளாவது ஆகும்புவியில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும்ஆயுட்காலம் உண்டுஆனால் ஆயுட்காலம் இல்லாத ஒரே உயிர் மரம் மட்டும் தான்மனிதர்களாலும் இயற்கையாலும் எந்தவித இடையூறும் ஏற்படாத வரை மரங்கள்எத்தனை ஆண்டு காலம் வேண்டுமாலும் புவியில் உயிர்வாழ முடியும்மரங்கள் நமக்குதரும் நன்மைகள் பலஎதை எடுத்துக்கொண்டாலும் நன்மை தீமை என்று இரு பக்கம்இருக்கும்நன்மை மட்டுமே அதிக அளவில் நிறைந்திருக்கும் ஒரே உயிர் மரம் தான்.

புவி வெப்பமடைதலை தடுக்கிறது
       மரங்களால் உயிரனங்கள் அடையும் நன்மைகள் பல பலமரங்கள் புவிவெப்பமாதலைத் தடுக்கிறதுமரங்கள் வாகனங்களில் இருந்து வெளிவரும் கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை வெளிவிடுகிறதுஇதனால் நமக்கு சுத்தமான காற்று கிடைக்கிறதுவாகனங்களின் எண்ணிக்கைஅதிகரித்ததாலும் அதிக கார்பன் வெளியேற்றதாலும் 2000 ஆண்டு வரை 25% மாக இருந்தபுவி வெப்பம் இன்று 37%மாக அதிகரித்துள்ளதுஇவற்றை கட்டுப்படுத்தும் திறன்மரங்களுக்கு மட்டுமே உண்டுநன்றாக வளர்ந்து முதிர்ந்த ஒரு மரம் ஒரு ஆண்டில் 48 பவுண்ட் கார்பன்-டை-ஆக்ஸைடை இழுத்துக் கொள்கிறது.

மண் அரிப்பை தடுக்கிறது

மரங்களின் வேர்கள் மண்ணில் நன்கு பிணைப்புடன் இருப்பதால் மழை காலங்களில்ஏற்படும் மண் அரிப்பை தடுக்கிறதுமேலும் மண் வளத்தை மேம்படுத்துகிறதுமரங்கள்நிழல் தருபவைகளாகவும் உள்ளதுவெயிலில் கஷ்டப்படுகிறவர்களுக்குத் தான் நிழலின்அருமை தெரியும் என்பர்அது அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய உண்மை தான்மேலும் மேசைகள் செய்யவும் வீட்டு உபயோக பொருள்கள் செய்யவும் எரிபொருளாகவும்எந்த பகுதியும் பயனற்று போகாமல் மரத்தின் எல்லா பகுதியும் பயனளிப்பவையாகஉள்ளது.

காற்றை விலைக்கு வாங்கும் நிலை

இத்துனை நன்மைகள் நிறைந்த மரங்களை நாம் சாதாரணமாக வெட்டுகிறோம்இந்நிலைநீடித்துக் கொண்டே போனால் நாம் நம் எதிர்கால சந்ததியினருக்கு சுத்தமான காற்றைவிலை கொடுத்து வாங்கும் அவல நிலையை ஏற்படுத்தி விடுவோம்நீரைவீணாக்கியதால் நம் தலைமுறையே நீரை விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதுகாற்றிலும் இந்த நிலை ஏற்படாமல் இருக்க நாம் கவனமாக இருக்க வேண்டியது மிக மிகஅவசியம்.

ம் முன்னோர்களின் பெருமை

நம் தலைமுறை அசோகர் மரம் நட்டார் என்ற வரலாற்றை படித்து பெருமிதம் அடைகிறதுநாளைய தலைமுறை நம் முன்னோர்கள் அதாவது நாம் மரத்தை வெட்டி அவர்களுக்குபுவி வெப்பத்தை விட்டுச் சென்றோம்  என்ற பெயர் நமக்கு வேண்டுமா?? நீங்களேசிந்தியுங்கள்நம் எதிர்கால சந்ததியினருக்கு வெப்பம் என்னும் தீயை விட்டுச் சென்றுஅவர்களை அவல நிலையில் ஆழ்த்த வேண்டாம்நாம் என்றும் நம் முன்னோர்களைஎண்ணியும் அவர்கள் விட்டுச் சென்ற வளங்களை எண்ணியும் பெருமிதம் அடைகிறோம்அதேபோல நம் சந்ததியினரும் நம்மை எண்ணி பெருமிதம் அடையும் வகையில்வழிவகை செய்ய வேண்டும்.

அப்துல்கலாம் ஐயா கூட மரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பலசொற்பொழிவுகளையும் மரக்கன்றுகளையும் அதிக அளவில் நட்டு உள்ளார்பிறர்நடுவதற்கு காரணமாகவும் உள்ளார்.ம் ஒன்று நாம்வைக்கும் மரம் மட்டுமேஎனவே அதிக அளவில் மரங்களை நடுவோம்!! புவிவெப்பமடைவதை தடுப்போம்!!