காற்றாலையின் மூலம் மின் உற்பத்தி
தற்போதைய உலகின் மின்சார தேவைக்கு ஈடு கொடுக்கு முகமாக நீர் மின், அனல்மின்,
அணுமின் என பல்வேறு முறைகளில் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது, இவை அனைத்தும்
அதி கூடிய செலவுடன் சூழலையும் பாதிப்பதாகவே அமைகின்றது.
அதனால் தற்போதய விஞ்ஞான உலகம் அழிவிலா
சக்தி மூலங்களிலிருந்தும், செலவு குறைந்த, சூழலுக்கு பாதிப்பில்லாத மின் உற்பத்தி
முறைகளில் நாட்டம் கொண்டு வெற்றியும் கண்டுளளது, அந்தவகையில் சூரிய ஔி மூலமான மின்
உற்பத்தியு, மற்றும் காற்றாலை மூலமான மின் உற்பத்தி போன்றவற்றில் வெற்றியும் கண்டுள்ளது.
இவ்வனைத்து முறைகளிலும் ஆற்றலை உருவாக்கி அதை மின்சக்தியாக மாற்றப்படுகிறது. அவ்வாறேதான் காற்றாலைகளும் செயல்படுகின்றன.
இங்கு மின் உற்பத்திக்கு உருவாக்கப்படும்
காற்றாலைகள், 200 தெடக்கம் 350 அடி உயரத்தில் அமைக்கப்படுகின்றது.
காரணம் இறக்ைககள்
சுழலும் போது எந்த இடையூறும் ஏற்படக்கூடாது. அத்துடன், உயரம் அதிகமாக
இருந்தால் காற்றும் இடையூறு இல்லாமல் வந்து சேரும்.
ஆரம்ப காலத்தில், சோளமாவு தயாரிக்கவே இந்த காற்றாலை முறை உருவாக்கப்பட்டது. மற்றும் நிலத்தடி நீரை மேலே
கொண்டுவரவும் இந்த முறை பயன்படுத்தப்பட்டது.
காற்றாலையில் மூன்று அல்லது இரண்டு இறக்ைககள் பொருத்தப்பட்டிருக்கும்.
இவ்விறக்ைககள் 120 அடிக்கும்
அதிகமான நீளம் கொண்டிருக்கும். இவ்விறக்ைககள் கண்ணாடி
இழைகள் மூலம் தயாரிக்கப்படுகின்றது.
காற்றின் வேகத்தை பொறுத்து இறக்ைககள் சுழல்கின்றது.
இந்த இறக்ைககள் சுழலும் போது அதனுடன் அமைக்கப்பட்டிருக்கும் மின்பிறப்பாக்கி
சுழலும்.
அந்த இறக்ைககள் மின்பிறப்பாக்கி 1:90 என்ற விகித்தில் செயல்படும். அதாவது இறக்ைக 1 முறை சுழழும் போது மின்பிறப்பாக்கி 90 முறை சுழல்கிறது.
அவ்வாறு அந்த மின்பிறப்பாக்கி மின் சக்தியை உற்பத்தி
செய்கின்றது
அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மின் சக்தியை, காற்றாலையின் கீழே கொண்டு வரப்பட்டு கீழே இணைக்கப்பட்டிருக்கும்.
மின்மாற்றி
மின்சக்தியாக மாற்றி, நமது பயன்பாட்டிற்கு கொண்டு செல்லப்படும்.
காற்றாலையில் தூண்கள், இரும்புகள் மூலம் தயாரிக்கப்படும். இந்த அமைப்பு முழுவதும், காலநிலை மாற்றத்தை
எதிர் கொள்ளும் வகையில் முலாம் பூசப்பட்டிருக்கும்.
இவ்வாறு செயல்படும் காற்றாலையில் காற்றின் திசை, வெகத்தையும் அறிந்து கட்டுப்படுத்தி சமநிலையில் சுழல செய்கின்ற உணரிகள் இணைக்கப்பட்டிளளது.