விண்வெளியில் வெறுமையான பிராந்தியமொன்றில் காணப்பட்ட இளம் கோள் ஒன்றை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
2 மாஸ் ஜே 1119 – 1137 என அழைக்கப்படும் இந்தக் கோள் 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பூமியிலிருந்து சுமார் 95 ஒளியாண்டுகள் தொலைவில் காணப்பட்ட அந்தக் கோள் எமது வியாழக்கிரகத்தை விடவும் 8 மடங்கு திணிவைக் கொண்டதாகும்.
கோள்கள் நட்சத்திரமொன்றை சுற்றி வருவதே வழமையாகவுள்ள நிலையில் இந்தக் கோள் தனக்கென நட்சத்திரமொன்றையும் கொண்டிராது தனித்துக் காணப்படுகின்றமை விண்வெளி ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
0 comments:
Post a Comment