யொசிமைற் இயங்கு தளத்தின் முகப்பு தோற்றம்.
யொசிமைற் இயங்குதளம் அப்பிள் நிறுவனத்தின் பதிப்பின் OS X 10.10 பதிப்பாக உள்ளது. இதற்கு முதல் பதிப்பாக OS X 10.9 அதாவது மவறிக்ஸ் (Mavericks) என்ற பெயரில் அழைக்கப்பட்டது.
அப்பிள் கையடக்க தொலைபேசியில் பாவிக்கப்படும் iOS 8 இயங்கு தளத்துடன் மிக நெருக்கமாக பரிமாற்றங்களை செய்யக்கூடியவாறு இவ் இயங்கு தளம் வடிவமைக்கப்பட்டது.
பாவனையாளர் திரையானது சிக்கலான முப்பரிமாண தன்மையில் இருந்து நீக்கப்பபட்டு மிகவும் இலகுவானதும் சிக்கல்கல் அற்றதுமான நிழல் (drop shadow) விழக்கூடியவாறான icon கள் கொண்டமைந்த வடிவமைப்பை வழங்குவதால் மேலும் சிறப்பாகவும் வினைத்திறனாகவும் உள்ளது.
Spotlight
இந்த செயலியானது அப்பிளின் முந்திய பதிப்புகளில் இருந்தாலும் யொசிமைற் இயங்கு தளத்தில் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.அப்பிள் கணனியில் command + spacebar அழுத்துவதன் மூலம் இந்த வசதியைப் பெற்றுக் கொள்ள முடியும்.
முன்னைய பதிப்புகளை போலல்லாது இதில் கணனியின் சேமிப்பகத்தில் உள்ள தரவுகளை தேடுவது மட்டுமல்லாது விக்கிபீடியா போன்ற இணையத்தளங்களின் தேடல்களையும் இலகுவாக செய்யக்கூடியதாக உள்ளது.
iCloud Drive
இந்த வசதி யொசிமைற் இயங்கு தளத்தில் புதிதாக உள்ளடக்கப்பட்டுள்ளது.இந்த Drive ஆனது எவ்வாறு கோப்புகளை கையாள்வது பார்ப்பது நிர்வகிப்பது போன்ற விடயங்களை மிகச் சிறப்பாக செயற்படுத்தக் கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
Mail Drop
வழமையாக மின்னஞ்களின் இணைக்கப்படும் கோப்புகளின் அளவு 20MB அளவிற்கு வரையறுக்கப்பட்டுள்ளது. என்றாலும் இந்த mail drop வசதியானது 5GB அளவிற்கு கோப்புகளை அனுப்பக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேற்கூறப்பட்ட போன்ற பல்வேறுபட்ட நவீன வசதிகளுடன் அப்பிள் நிறுவனத்தின் இயங்குதளம் உலக அளவில் பெரிய புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வசதிகளை நாங்களும் அனுபவிப்பதன் மூலம் தொழில்நுட்ப உலகில் எங்களையும் பிரவேசிக்கச் செய்வோமாக.
மேலதிக தகவல்களுக்கும் விபரங்களுக்கும் www.apple.com இணையத்தளத்தை பார்வையிடவும்.
No comments:
Post a Comment